For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகள் பெயரில் கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி

கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி இன்று பதவியேற்கிறார். நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி-வீடியோ

    பெங்களூர்: கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமி பதவியேற்றார். அவருடன் துணை முதல்வராக பரமேஸ்வராவும் பதவி ஏற்றார். சட்டமன்றத்தில் குமாரசாமி நாளை மறுதினம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

    கர்நாடகத்தில் பெரும் இழுபறியில் இருந்த முதல்வர் யார் என்ற கேள்வி இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. பெரும்பான்மைமை நிரூபிக்காமலேயே எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

    Today Kumarasamy is going to take oath as CM

    இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் குமாரசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

    விவசாயிகள் பெயரில் குமாரசாமி பதவியேற்றுக் கொண்டார். கர்நாடகத்தின் முதல்வராக 2-ஆவது முறை பதவியேற்றார்.

    நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். அதில் வெற்றி பெற்றவுடன் மற்ற அமைச்சர்கள், சபாநாயகர் உள்ளிட்ட பதவிப்பிரமாணம் செய்து கொள்வர்.

    குமாரசாமி பதவியேற்பு விழா இன்று 4.30 மணிக்கு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சோனியா, ராகுல், மாயாவதி, பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார், சந்திரபாபு நாயுடு, சீதாராம் யெச்சூரி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த எதிர்க்கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக ஓர் அணியில் திரளும் என்ற யூகம் நிலவுகிறது. இந்த விழாவுக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

    English summary
    Today Kumarasamy is going to take oath as CM. He also proves his majority in Karnataka Assembly tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X