For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை... ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

Google Oneindia Tamil News

ஜம்மு : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தின் ககாபுரா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

gun battle

இதன் அடிப்படியில், அப்பகுதிக்குச் சென்ற பாதுகாப்பு படையினர், பேகம்பாக் என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்துப் பிடிக்க முயற்சி செய்தனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. ஒரு கட்டத்தில், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், தீவிரவாதிகள் பின்வாங்கினர். எனினும், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து நடத்திய தாக்குதலில், லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியான இர்ஷத் கனி என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவன், கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைதர்போரா பகுதியில் ராணுவ கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவனைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
A top Lashker-e-Taiba militant, carrying a reward of Rs 10 lakh on his head, was on Saturday killed in an encounter with police and Army in Pulwama district, marking a major success for the security forces
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X