For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோல்கொண்டா கோட்டை அழகா.. சுற்றிப் பார்க்க வந்த இவாங்கா அழகா.. வசீகரித்த டிரம்ப் மகள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    கூலிங் கிளாஸ் அணிந்து கூலாக கோல்கொண்டா கோட்டையை சுற்றி பார்த்த இவாங்கா!- வீடியோ

    ஹைதராபாத்: பிசினஸ் டென்ஷன்களை ஓரம் கட்டிவிட்டு கூலாக கோல்கொண்டா கோட்டையை பார்வையிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் மகள் இவாங்கா ட்ரம்ப்.

    தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்க ஹைதராபாத் வந்த இவாங்காவிற்கு இந்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, இவாங்காவுடன் செவ்வாயன்று, டின்னர் சாப்பிட்டார்.

    இந்த நிலையில், நேற்று ஹைதராபாத்தில் உள்ள புகழ் பெற்ற கோல்கொண்டா கோட்டையை இவாங்கா சுற்றிப் பார்த்தார்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    இவாங்காவுக்கு முன்னும் பின்னும், அமெரிக்க பாதுகாப்பு வீரர்களும், தெலுங்கானா போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பெண் ஒருவர் கோட்டையை சுற்றிக் காட்ட 'கைடு' போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார்.

    கூலிங் கிளாஸ்

    கூலிங் கிளாஸ்

    இவாங்கா அசத்தல் கவுன் உடுத்தி, கூலிங் கிளாஸ் அணிந்து, கோட்டையை நடந்து சுற்றி பார்த்தார். அங்கிருந்த தண்ணீர் சப்ளை சிஸ்டத்தை பார்த்து அவர் வியப்பு தெரிவித்ததாக உடனிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    ஹைஹீல்ஸ் மிஸ்சிங்

    ஹைஹீல்ஸ் மிஸ்சிங்

    கோட்டையின் ஏற்றத்தாழ்வான நிலப்பரப்பை இவாங்காவுக்கு யாராவது முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். ஏனெனில் வழக்கமான ஹை ஹீல்ஸ் செருப்பை தவிர்த்து சாதாரண செருப்பிலேயே அவர் கோட்டையை சுற்றி பார்த்தார்.

    வேறு நபர்களுக்கு அனுமதியில்லை

    வேறு நபர்களுக்கு அனுமதியில்லை

    இவாங்கா சுற்றி பார்க்கும்போது வேறு மக்கள் யாரும் கோட்டைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து அவரே கேள்வி எழுப்பினார். அதற்கு நியூயார்க் காவல்துறையை போலவே, ஹைதராபாத் காவல்துறையும், பாதுகாப்புக்காக உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை என்று போலீசார் பதில் அளித்தனர்.

    English summary
    Wrapping up her business commitments at the Global Entrepreneurship Summit (GES), Ivanka Trump set out on a quick sight-seeing trip to Hyderabad’s historic Golconda Fort.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X