For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் கட்சிகள் ஊடக நிறுவனங்களை நடத்த அனுமதிக்க கூடாது: டிராய்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: கையூட்டு, பாரபட்சமான செய்திகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், அரசியல் கட்சிகள், மதச் சார்பு அமைப்புகள் ஊடக நிறுவனங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று டிராய் வலியுறுத்தியுள்ளது.

ஊடக நிறுவனங்கள் உரிமம் தொடர்பான பிரச்னைகளை களைவது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை டெல்லியில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தலைவர் ராகுல் குல்லார் வெளியிட்டார்.

TRAI suggests restriction on political parties, corporate in media

அரசியல் கட்சிகளின் சேனல்கள்

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தொலைக்காட்சி, பத்திரிகை நிறுவனங்களை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், மதச்சார்பு அமைப்புகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள், அரசு நிதிபெறும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி தரக் கூடாது.

உரிமம் ரத்து

இந்த அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள், துணை நிறுவனங்களுக்கும் ஊடக நிறுவனங்கள் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். மேற்கண்ட அமைப்புகள் ஊடக நிறுவனங்களை ஏற்கெனவே நடத்தி வந்தால் அதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.

பங்கு உரிமை

தனிநபர்களால் நடத்தப்படும் ஊடக நிறுவனத்தில் உரிமையாளரின் முதலீட்டு பங்குரிமை 32 சதவீதமாக வரையறுக்கப்பட வேண்டும். பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய இரண்டையும் ஒரு சேர நடத்தி வந்தாலும் இதே அளவு பங்கு உரிமைதான் அளிக்க வேண்டும்.

தனிச்சட்டம் தேவை

பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கென தனியாக ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைக்க வேண்டும். இதற்கென தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.

அபராதம் விதிக்க

கையூட்டுச் செய்திகளை வெளியிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட செய்தியை அளித்த நபர் மற்றும் ஊடக நிறுவனத்தை தண்டிக்கவும், அபராதம் விதிக்கவும் கூடிய அதிகாரத்தை இந்த ஆணையத்துக்கு வழங்க வேண்டும்.

வியாபார நோக்கில்

இதன் உறுப்பினர்களாக ஊடகத் துறைக்குச் சம்பந்தமில்லாதவர்களை நியமிக்க வேண்டும். பெரு வணிக நிறுவனங்களால் நடத்தப்படும் ஊடக நிறுவனங்களின் சில செயல்பாடுகள் தரம் தாழ்ந்துவிட்டன. அந்த நிறுவனங்களின் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வியாபார நோக்கில் உள்ளன" என்றார்.

அரசியல் கட்சி சேனல்கள்

தமிழ்நாட்டில் கலைஞர் டிவி தொடங்கி ஜெயா, கேப்டன், புதிய தலைமுறை, மக்கள், என அரசியல் கட்சித்தலைவர்கள் நடத்தும் சேனல்கள்தான் கோலோச்சுகின்றன.

English summary
In an attempt to ensure plurality of news and views, broadcast regulator Trai today suggested restriction on political bodies and corporates entering the television and newspaper business.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X