For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10 லட்சம் இமெயில் ஐடிகளை ''லீக்'' செய்த டிராய்.. பதிலடியாய் இணையத்தை ஹேக் செய்த அனானிமஸ்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அனானிமஸ் இந்தியா என்ற ஹேக்கர்கள் குழு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் இணையதளத்தை முடக்கியது.

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் நெட் நியூட்ராலிட்டி அதாவது இணையதள சமவாய்ப்பு பற்றி மக்களிடம் கருத்து கேட்டிருந்தது. இதையடுத்து சுமார் 10 லட்சம் பேர் கருத்து தெரிவித்து டிராய்க்கு இமெயில் அனுப்பினர். இந்நிலையில் கருத்து தெரிவித்த அனைவரின் இமெயில் ஐடிகளையும் டிராய் திங்கட்கிழமை தனது இணையதளத்தில் வெளியிட்டது.

இதையடுத்து அனானிமஸ் இந்தியா என்ற ஹேக்கர்கள் குழு டிராய் இணையதளத்தை முடக்கியது. இது குறித்து அனானிமஸ் குழு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நாங்கள் டிராய் இணையதளத்தை முடக்கியதற்காக சிலர் எங்களை விமர்சனம் செய்தீர்கள். ஆனால் நாங்கள் இப்படித் தான். டிராய், உங்களின் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தங்களுடன் சாட் செய்ய விரும்புபவர்களுக்கு அந்த குழு கூறியிருப்பதாவது,

எங்களுடன் பேச விரும்புபவர்கள், ஐஆசியில் எங்களுடன் சேருங்கள். https://www.anonops.com/xchat.html என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக் செய்து சிறிது நேரம் கழித்து டிராய் இணையதளம் http://www.trai.gov.in/ மீண்டும் வேலை செய்யத் துவங்கியது. ஆனால் இணையதளத்தில் 10 லட்சம் பேரின் இமெயில் ஐடிக்கள் அப்படியே உள்ளது.

English summary
Anonymous India, group of hackers, has hacked TRAI website on monday after it released the email IDs of those who responded to their consultation paper on Net neutrality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X