For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி... டிசம்பர் 22 முதல் அமல்

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில்வே டிக்கெட் முன்பதிவின்போது மாற்றுத் திறனாளிளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கு அப்பர் பெர்த் இனிமேல் ஒதுக்கப்பட மாட்டாது. மாறாக லோயர் பெர்த் அல்லது மிடில் பெர்த் ஒதுக்கப்படும்.

இதன் மூலம் அப்பர் பெர்த்ஒதுக்கப்பட்டு அதில் ஏற முடியாமல் தவிக்கும் அவலத்திலிருந்து உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளிகளுடன் துணையாக வருவோருக்கு மிடில் பெர்த் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் அமல்...

டிசம்பரில் அமல்...

டிசம்பர் 22ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது. உடல் ரீதியாக மாற்றுத் திறனாளிகளாக உள்ளோருக்கு லோயர் பெர்த் மற்றும் மிடில் பெர்த் மட்டுமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மட்டுமே இதில் முன்னுரிமை தரப்படும்.

லோயர் பர்த் மட்டுமே...

லோயர் பர்த் மட்டுமே...

உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கு லோயர் பர்த் மட்டுமே தரப்படும். அவர்களுடன் துணைக்கு வரும் நபர் இருந்தால் அவர்களுக்கு மிடில் பெர்த் தரப்படும்.

மாற்று ஏற்பாடு...

மாற்று ஏற்பாடு...

மேலும் உடல் ரீதியான மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் சீட் இல்லாமல் போனால், அதற்கான அதே சலுகையுடன் பிற கோட்டாவில் உள்ள சீட்களைப் பெறவும் இனி வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது மாற்றுத் திறனாளிகளுக்கான கோட்டாவில் இடம் இல்லாவிட்டால் பொது கோட்டாவிலிருந்து இடம் தரப்படும், அதே கட்டணச் சலுகையுடன்.

காரணம்...

காரணம்...

இதுதொடர்பாக வந்த பல்வேறு புகார்கள் மற்றும் பரிந்துரைகளை ஆராய்ந்து இப்போது ரயில்வே அமைச்சகம் இந்த சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
In a much-needed relief to the physically-challenged persons availing concessional rail fares, Railways has rationalised provisions for allotment of berths in a sleeper class under such quota by earmarking middle seat for the accompanying passenger.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X