For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து.. 23 பேர் பலி, 40 பேர் படுகாயம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 23 பயணிகள் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

முசாஃபர்நகர்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 23 பயணிகள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

பூரி-ஹரித்துவார்- கலிங்கா இடையே உத்கல் எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. மாலை 5.50 மணியளவில் உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் அருகே ரயில் வந்தது. அப்போது ரயிலின் 14 பெட்டிகள் திடீரென தடம்புரண்டன.

 Train coaches derailed near Muzaffarnagar in Uttarpradesh

இந்த விபத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர். தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 23 பயணிகள் உயிரிழந்துவிட்டனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர் என்று உத்தரபிரதேச போலீசார் இரவு 9.40 மணியளவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். உ.பி. போலீசார் முதலில் தவறுதலாக 400 பேர் காயமடைந்ததாக செய்தி வெளியிட்டு பிறகு அதை திருத்தினர்.

 Train coaches derailed near Muzaffarnagar in Uttarpradesh

இதனிடையே, பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது. மூத்த அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளேன் என்றும், நான் தனிப்பட்ட முறையில் நிலைமையை கண்காணிக்கிறேன் என்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முசாஃபர்நகர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதாகவும், அதனால்தான் ரயில் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே, காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையளிக்க உ.பி. முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3.5 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

English summary
Utkal expresss's 6 coaches derailed near Muzaffarnagar, UP. Several passengers were injured.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X