For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

200கிமீ தூரம் வழி மாறி சென்ற ரயில்.. போராட சென்ற விவசாயிகளை நடுவழியில் தவிக்கவிட்ட ரயில்வே

டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்ல வேண்டிய ரயில் 200 கிமீ தூரம் தவறாக சென்று மத்திய பிரதேச மாநிலத்தை அடைந்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்ல வேண்டிய ரயில் 200 கிமீ தூரம் தவறாக வழி மாறி சென்று இருக்கிறது. இதன் காரணமாக இந்த ரயில் மத்திய பிரதேச மாநிலத்தை அடைந்து உள்ளது.

இந்த ரயிலில் 1500க்கும் மேற்பட்ட விவாசாயிகள் பயணித்து இருக்கிறார்கள், மேலும் இவர்கள் அனைவரும் டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்திவிட்டு திரும்பி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த மோசமான அலட்சியம் காரணமாக விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

டெல்லியில் போராட்டம்

டெல்லியில் போராட்டம்

மஹாராஷ்டிராவை சேர்ந்த 1500 க்கும் அதிகமான விவசாயிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்தனர். இவர்கள் பல மாநில விவசாயிகளுடன் சேர்ந்து ஒன்றாக போராட்டங்களில் ஈடுபட்டனர். கடன் தொல்லை, விலைவாசி உயர்வு, புதிய திட்டங்கள் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து மஹாராஷ்டிரா செல்வதற்காக 'ஸ்வபிமணி எக்ஸ்பிரஸில்' பயணித்து இருக்கிறார்கள்.

வழி தவறியது

வழி தவறியது

இந்த ஸ்வபிமணி எக்ஸ்பிரஸ் டெல்லியில் இருந்து மஹராஷ்டிரா செல்ல வேண்டியது. ஆனால் இந்த ரயில் 200 க்கும் அதிகமான கிலோ மீட்டர் தவறான வழியில் சென்று இருக்கிறது. மேலும் ரயிலில் இருந்த ஊழியர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த நிலையில் அந்த ரயில் மத்தியபிரதேசத்தை அடைந்த பின்பே ரயில் வழி மாறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

மீண்டும் போராட்டம்

மீண்டும் போராட்டம்

இதையடுத்து வழி தவறி சென்றது குறித்து விவசாயிகளிடம் சரியான விளக்கத்தை அளிக்க ரயில்வே அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர். ஆகவே விவசாயிகள் அதே இடத்தில் மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வலுவடைந்ததை அடுத்து ரயில்வே நிர்வாகம் பல மணி நேரத்திற்கு பின் சமாதானம் செய்ய முயன்றது. அதன்பின் அவர்களுக்கு வேறுறொரு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எப்படி நடத்து

எப்படி நடத்து

தற்போது வரை இதற்கு சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. ரயில் டிராக்குகள் தவறாக மாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இது குறித்து தீவிர விசாரணையை தொடங்க ரயில்வே நிர்வாகம் ஆணையிட்டு இருக்கிறது. இதனால் பெரிய அளவில் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lot of farmers who were returning to Maharashtra after attending a huge protest in New Delhi bt ended up in Madhya Pradesh. The train has travelled in the wrong direction for close to two hundred kilo metres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X