For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டில் முதல்முறையாக மும்பையில் வாடகை டாக்சி ஓட்டப்போகும் திருநங்கைகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: இதுவரை கேலிக்குரியவர்களாக பிறரால் பார்க்கப்பட்ட திருநங்கைகள் விரைவில் மும்பையில் வாடகை கார் ஓட்டி அசத்தப்போகிறார்கள். லெஸ்பியன், கே, பயோசெக்ஸ்சுவல், திருநங்கைகள் (எல்ஜிபிடி) அமைப்பின் உறுப்பினர்கள் இதற்கான பயிற்சி பெற்றுவருகிறார்கள்.

விங்ஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார்களை இவர்கள் இயக்கப்போகிறார்கள். எல்பிஜிடி குரூப்பை சேர்ந்தவர்களில் திருநங்கைகளைத்தான் மக்களால் வெளிப்படையாக அடையாளம் காண முடிகிறது. எனவே அவர்களுக்குத்தான் சமூக புறக்கணிப்பும் அதிகமாக உள்ளது.

Transgenders to drive cabs, India's first LGBT cab service launches in Mumbai

சமூக புறக்கணிப்பு காரணமாக, வேலை வாய்ப்பு கிடைக்காமல், பிச்சை எடுத்தல், விபச்சாரம் போன்றவற்றில் திருநங்கைகள் அதிகமாக ஈடுபடுகிறார்கள். எனவே வாடகை கார் ஓட்டும் தொழில் அவர்களுக்கு நல்ல கவுரத்தையும், வருவாயையும் தரும் என்கிறது இதற்கான ஏற்பாடுகளை செய்யும் ஹும்சஃபர் அறக்கட்டளை. சுமார் 1500 பேருக்கு முதல்கட்டமாக வேலை கிடைக்க உள்ளதாம். மாதம் ரூ.15 ஆயிரம்வரை அவர்களுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
In a first of its kind initiative transgenders will soon be seen driving cabs on Mumbai roads. The cab service to be run by LGBT members has been named wings rainbow. it was launched yesterday by Humsafar Trust who joined hands with Wings Travels. Right now there are openings for 1500 LGBT members to run the cabs who can earn 15000 a month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X