For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஷ்புக்கு எதுக்கு கோயில்?... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு கோயில் கட்டுவதற்காக திருநங்கைகள் அடிக்கல் நாட்டியுள்ளனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்டுவதற்காக திருநங்கைகள் ஒன்று கூடி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளையும் தொடங்கியுள்ளனர்.

ஆந்திர வரலாற்றிலேயே முதன்முறையாக அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கோயில் கட்ட திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர். கோயிலுக்குள் சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி சிலை வைக்கப்பட உள்ளது. சமந்தா ஹிஜ்ராஸ் ஹக்குலா ஐக்கிய போராட்ட வேதிகா அமைப்பு நாண்டியால் பகுதியில் இந்த கோயிலை கட்ட உள்ளனர். உயிரோடு இருக்கும் ஒரு அரசியல் தலைவருக்காக கோயில் கட்டப்பட உள்ளது.

Transgenders laid stone to construct temple for Andhra CM Chandrababu naidu

கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகிலா பிரியா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட ஆட்சியர் சத்யநாராயணாவும் உடன் இருந்து கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.

நாண்டியால் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திருநங்கைகள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகளுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு செவி சாய்த்ததாக திருநங்கைகள் கூறுகின்றனர். ஆந்திராவில் வாழும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வீடு மற்றம் இதர பல்வேறு நலத்திட்ட உதவிகளை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திருநங்கைகள் இந்த கோயிலை கட்டுவதாக கூறியுள்ளனர்.

திருநங்கைகளுக்காக எந்த முதல்வரும் சிறந்த திட்டங்களை அறிவித்தது இல்லை என்றும், ரூ. 30 லட்சம் செலவில் கோயில் கட்டி தங்களது நன்றிக்கடனை வெளிக்காட்டப் போவதாகவும் திருநங்கைகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் அபிருச்சி மது சந்திரபாபு நாயுடு வெள்ளி சிலைக்காக ரூ. 5 லட்சம் நிதி கொடுத்துள்ளார். 5 கிலோ எடையில் இந்த சிலை உருவாக்கப்பட்டு கோயிலில் நிறுவப்பட உள்ளது. இதே போன்று கோயில் கட்டுமானப் பணிக்காக கூடுதலாக ரூ. 5 லட்சத்தையும் அபிருச்சி வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் நடிகைகளுக்காக அவர்களது தீவிர ரசிகர்கள் கோயில் கட்டியதைத் தான் கேள்விபட்டிருக்கிறோம், ஆனால் முதல்முறையாக ஒரு முதல்வருக்காக அதுவும் சமூகத்தில் ஏளனமாக பார்க்கப்படும் திருநங்கைகள் கோயில் கட்டுவது கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திர வரலாற்றிலும் முதல்முறையாக அரசியல் தலைவருக்காக திருநங்கைகள் கட்டும் கோயில் இது என்றும் பேசப்படுகிறது.

English summary
First time in the history of Andhra Pradesh, foundation stone was laid for a temple for Chandrababu naidu by transgenders Samantha Hijras Hakkula Ikya Porata Vedika at Nandyal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X