For Daily Alerts
Just In
அந்தமான் தீவுகளில் நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு
போர்ட் பிளேர்: அந்தமான் தீவுகளில் நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9-ஆக பதிவானது.
அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.50 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்தன.

இதனால் மக்கள் பதறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
இதே போல் கடந்த 16-ஆம் தேதி நியூசிலாந்தில் கெர்மடெக் தீவு என்பது மக்கள் அதிகம் வசிக்காத பகுதியாகும். இந்த தீவுகளுக்கு வடக்கே காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. தற்போது அந்தமான் தீவுகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.