For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுக்கு தேசிய அளவில் பெருகும் ஆதரவு.. வருமான வரி சோதனைக்கு திரிணாமூல் காங்கிரஸ் கண்டனம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு, அவருக்கு சொந்தமான கல்லூரிகள் போன்றவற்றில் இருந்து அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Trinamool Congress condemns I-T Raids in Duraimurugan house

திமுகவின் பொருளாளர் பதவியில் இருப்பவர் திருமுருகன் என்பதால், இந்த ரெய்டு விஷயம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சிகள் மீது பாஜக வருமான வரித்துறையை ஆயுதமாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த வாதத்திற்கு வலு சேர்ப்பது போல இந்த அறையில் அடைந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், "இன்று தமிழகம். அரசியல் பழிவாங்கும் மோசமான போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேற்குவங்கம், டெல்லி, உத்தரபிரதேசம், ஆந்திரா, பீகார், கர்நாடகா மற்றும் பலர்.. என்று பல அரசியல் எதிரிகளையும், பாஜக அரசு துன்புறுத்தி வருகிறது. மகன் வேட்பாளராக உள்ள நிலையில், திமுக பொருளாளர் மீதான வருமான வரி சோதனை கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

English summary
"Today Tamil Nadu. Nasty tour of political vendetta continues. After Bengal, Delhi, UP, Andhra, Bihar, Karnataka & others, the BJP govt now harassed more political opponents. IT officials raid DMK treasurer whose son is a candidate. We condemn this", says All India Trinamool Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X