For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டின் 7வது தேசிய கட்சியாக உருவெடுத்தது 'திரிணாமுல் காங்கிரஸ்'

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகள் உள்ளன. அந்த பட்டியலில் தற்போது 7 வது கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் இணைந்துள்ளது.

அரசியல் கட்சிகள் தேசிய கட்சி அங்கீகாரம் பெற குறைந்தது 4 மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்று தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) உத்தரவு 1968 விதி கூறுகின்றது.

 Trinamool Congress is now 7th 'national party' in India

மாநில சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட சதவீத வாக்குகளுடன் சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும். மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் என 4 மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது.

4 மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து அக்கட்சிக்கு தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியுள்ளது

இந்தியாவில் தற்போது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக காங்கிரஸ், பாரதீய ஜனதா, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய 6 கட்சிகள் உள்ளன. இந்த பட்டியலில் 7 ஆவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. இது தவிர, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக 64 கட்சிகள் உள்ளன.

இந்த அங்கீகாரம் மூலம் இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்திலும் சட்டமன்ற, மக்களவைத் தேர்தலில் இக்கட்சி போட்டியிடலாம். இதன் மூலம் திரிணாமுல் கட்சியின் சின்னத்தை நாடு முழுவதும் வேறெந்த கட்சிகளோ, சுயேச்சைகளோ பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
All India Trinamool Congress is now 7th 'national party' in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X