• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேக்சின் மோசடி.. போட்டோவால் ட்விஸ்ட்.. மே.வங்க ஆளுநரை டார்கெட் செய்யும் திரிணாமுல் காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கு எதிராக அதிரடியாக குற்றச்சாட்டுக்களை கூறி கார்னர் செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அண்மையில் நடந்த போலி தடுப்பூசி முகாமில் தொடர்புடையவரின் மெய்காப்பாளருடன் ஆளுநர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கேள்வி எழுப்பி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி. கொல்கத்தாவில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாமில் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். அதில் மிமி உள்ளிட்ட பலருக்கு வயிற்று வலி, ரத்த அழுத்தக் குறைவு, நீர்ச்சத்து குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.

இதையடுத்து நடந்த விசாரணையில் கரோனா தடுப்பூசி முகாம் போலியானது என்றும், அந்த மருந்தும் போலியானது என்றும் தெரியவந்துள்ளது. தேபஞ்சன் தேவ் என்ற பெயரில் தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறிக்கொண்ட நபர், இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்து மோசடி செய்தது தெரியவந்தது.

4 பேர் கைது

4 பேர் கைது

கொரோனா வைரஸ் தடுப்பூசி என்ற பெயரில் அவர் செலுத்தியது வெறும் எதிர்ப்பாற்றல் தரும் மருந்துகள் மட்டுமே என்று கண்டறியப்பட்டதை அடுத்து, தேபஞ்சன் தேவ் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். போலி தடுப்பூசி போட்டு அவர்கள் ரூ.1 கோடி வரை பணம் வசூலித்திருப்பதும் தெரியவந்தது. இந்த போலி ஐஏஎஸ் அதிகாரியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

முதல் படம் என்ன

முதல் படம் என்ன

இதனால் இந்த விவகாரம் விஸ்வரூம் எடுத்துள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு மத்திய அரசு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. சுகேந்து சேகர் ராய் இன்று கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இரண்டு புகைப்படங்களைக் காண்பித்தார். அதில்

ஒருவர் கொல்கத்தா தடுப்பூசி மோசடி செய்ததாக கைதான டெபஞ்சன் டெப் மற்றும் அவரது மெய்க்காப்பாளர் அமியா வைத்யா. அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்தார். ‘

மெய்க்காப்பாளர்

மெய்க்காப்பாளர்

இரண்டாவது புகைப்படத்தில், மோசடி செய்தவரின் மெய்க்காப்பாளர் அமியா வைத்யா கொல்கத்தாவில் ராஜ் பவனில் ஆளுநருடன் இருக்கும் புகைப்படம் இருந்தது. அதில் ஆளுநர் ஜகதீப் தன்க மற்றும் அவரது மனைவி மற்ற இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அந்த புகைப்படத்தின் பின்னணியில் காவலர், இரண்டு பேருக்கு பின்னால் குறிப்பிட்ட மெய்க்காப்பாள்ர நிற்கிறார்.

சிக்குவார்கள்

சிக்குவார்கள்

இதுபற்றி கூறிய சுகேந்து சேகர் ராய் எம்பி, கவர்னருக்கும் மோசடி செய்பவரின் மெய்க்காப்பாளருக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயப்பட வேண்டும். புகைப்படங்கள் எங்களை அடைந்தபோது, ​​நாங்கள் திகைத்துப் போனோ. டெபன்ஜன் டெப் வெளிப்படையாக மிகவும் செல்வாக்கு மிக்கவர், அவருடைய பாதுகாப்புக் காவலர் கூட ஆளுநருடன் புகைப்படம் எடுக்கிறாரா? இது உண்மையில் மிகவும் தீவிரமான விஷயம். சிறப்பு விசாரணைக் குழுவிடம் இதுபற்றி அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொள்வோம். தற்போது சரியான விசாரணை நடைபெறுகிறது. அனைத்து மோசடியாளர்களும் சிக்குவார்கள் என்றார்.

பொய்யான தகவல்

பொய்யான தகவல்

இந்நிலையில் போலி தடுப்பூசி மோசடியில் ஆளுநரை சிக்கவைக்க திரிணாமுல் காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், முற்றிலும் பொய்யான தகவலை கூறி திசை திருப்ப முயல்வதாகவும் பாஜகவைச் சேர்ந்த திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் இப்படி ஏதாவது பொய் சொல்லி தங்களைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும். பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என்றார்.. இதனிடையே .
முன்னாள் சிபிஎம் எம்எல்ஏ சுஜன் சக்ரவர்த்தி, இதுபோன்ற பிரச்சினைகளை ஒவ்வொரு நாளும் ஊடகங்களுக்கு முன் எழுப்புவதற்கு பதிலாக, ஆளுநரை நியமித்த ஜனாதிபதியிடம் திரிணாமுல் ஏன் புகார் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

English summary
Kolkata fake vaccination scam : a new twist to its running battle with the West Bengal governor, the Trinamool Congress has trained its guns on him afresh with ammunition linked to the fake vaccination scam in Kolkata.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X