For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மமதா அலையில் வெறும் 2 இடத்தில் வென்ற சிபிஎம்!: முட்டை வாங்கிய கூட்டணி கட்சிகள்!!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடித்து வீசிய மமதா பானர்ஜி அலையில் அம்மாநிலத்தை 30 ஆண்டுகாலம் ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சி இருந்த இடம் தெரியாமல் 2 தொகுதிகளில்தான் முன்னிலை வகிக்கிறது. அதன் தோழர்களான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட், பார்வார்டு பிளாக் ஆகியவை முட்டை வாங்கி மூட்டை கட்டிக் கொண்டன.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 42 தொகுதிகள் உள்ளன.

திரிணாமுல் 34

திரிணாமுல் 34

இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் வென்றுள்ளது. மேலும் 22 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அப்படி ஒரு மமதா அலை வீசியிருக்கிறது.

காங்-4

காங்-4

காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் வென்றுள்ளது. 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

மார்க்சிஸ்ட்- 2

மார்க்சிஸ்ட்- 2

30 ஆண்டுகால ஆளும் கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியோ பரிதாபமாக 2 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது.

பாஜக -2

பாஜக -2

பாரதிய ஜனதாவும் கூட 2 தொகுதிகளில் இங்கு முன்னிலை வகித்துக் கொண்டுகிறது.

முட்டை வாங்கிய இதர இடதுகள்

முட்டை வாங்கிய இதர இடதுகள்

இம்மாநிலத்தில் இந்திய கம்யூனீஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ், அகில இந்திய பார்வார்டு பிளாக் ஆகிய இடதுசாரி கூட்டணிக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட்டன. ஆனால் இந்த இடதுகள் ஒரு இடத்திலும் கூட வெல்லவில்லை. முட்டை வாங்கியிருக்கிறார்கள்.

English summary
In West Bengal points towards a best-ever performance for the Trinamool Congress, which is leading in 34 of the 42 seats in the State. The trend has come as a major setback for the Left parties who are leading in just 2 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X