For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முத்தலாக் சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

By BBC News தமிழ்
|
முத்தலாக் முறை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ஐந்து முஸ்லீம் பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
Getty Images
முத்தலாக் முறை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி ஐந்து முஸ்லீம் பெண்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

முஸ்லீம்களின் திருமண வழக்கமான முத்தலாக் முறை, அரசியலைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அடுத்த ஆறு மாத காலத்திற்குள் முத்தலாக் முறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், தலைமை நீதிபதி ஜெ.எஸ் கேஹர் மற்றும் நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமை என தீர்ப்பு வழங்கினர்.

ஆனால் நீதிபதிகள் உதய் லலித், ரோஹிண்டன் நரிமன் மற்றும் ஜோசப் குரியன் ஆகியோர் முத்தலாக் முறை இந்திய அரசியலைப்புக்கு எதிரானது என தீர்ப்பளித்தனர்.எனவே பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், முத்தலாக் முறை சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முத்தலாக்கிற்கு எதிரான இந்த வழக்கானது முத்தலாக் முறையினால் விவாகரத்து அளிக்கப்பட்ட ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு பெண்ணுரிமை அமைப்புகள் மூலம் தொடரப்பட்டது.

பெண்ணுரிமை அமைப்புகள் முத்தலாக் முறை நடைமுறைக்கு எதிரானது என வாதிட்டு வந்தன. ஆனால் தங்கள் மத வழக்கங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என முஸ்லீம் அமைப்புகள் மற்றும் முஸ்லீம் மதக்குருக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தியாவில் 155 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய சிறுபான்மை இனமாக முஸ்லீம் சமுதாய மக்கள் உள்ளனர். இவர்களின் திருமணம் மற்றும் விவாகரத்து ஆகியவை ஷரியா அல்லது முஸ்லீம் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட முஸ்லீம் தனிநபர் சட்டப்படி நடத்தப்படுகிறது.

இதையும் படிக்கலாம் :

BBC Tamil
English summary
India's top court has ruled the practice of instant divorce in Islam unconstitutional, marking a major victory for women's rights activists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X