For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முத்தலாக் வழக்கும் கடந்து வந்த பாதையும்!

By BBC News தமிழ்
|

இந்தியாவில் முஸ்லிம் மதத்தினரால் எதிர்பார்க்கப்பட்டு வரும் முத்தலாக் வழக்கு கடந்த வந்த பாதையை விளக்கும் நாட்குறிப்பு இது.

2017, ஆகஸ்ட் 22

முத்தலாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

மே 18

அனைத்து தரப்பு மனுக்களும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைப்பு

மே 17

நிக்கநாமா (திருமண ஒப்பந்தம்) செய்யும்போது முத்தலாக் கூற முடியுமா? முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி

மே 16

முத்தலாக் 1000 ஆண்டுகள் பழமையானது. நம்பிக்கை அடிப்படையிலானது: முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம்

மே 15

முத்தலாக் வழக்கத்தை சட்டவிரோதம் என அறிவித்தால், முஸ்லிம் திருமண சட்டங்களை ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு தனி சட்டம் இயற்றும்: அட்டர்னி ஜெனரல் தகவல்.

மே 12

முஸ்லிம்கள் விவாக ரத்துக்கான முத்தலாக் முறை மிகவும் மோசமானது, விருப்பமில்லாதது: நீதிபதிகள் கருத்து

மே 11

முத்தலாக் மட்டுமே விசாரணை; பல தார விவாகம் பற்றி இப்போதைக்கு கவனம் செலுத்த விரும்பவில்லை: நீதிபதிகள்

மே 3

"முத்தலாக்" விசாரணைக்கு உதவும் நபராக இணைய முன்னாள் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கு நீதிபதிகள் அனுமதி

ஏப்ரல் 21

முஸ்லிம் நபர் தனது இந்து மனைவியிடம் முத்தலாக் கூறும் வழக்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர் நீதிமன்றம்

ஏப்ரல் 18

முத்தலாக் வழக்கத்தை ஏற்க கூடாது: அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதம்

ஏப்ரல் 16

முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதி

ஏப்ரல் 11

முஸ்லிம் பெண்களின் கண்ணியம், அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது முத்தலாக்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

மார்ச் 30

மே 11 முதல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மார்ச் 27

நீதிமன்ற அதிகார வரம்புக்குள் வழக்கு வராது: முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் வாதம்

பிப்ரவரி 16

முத்தலாக், நிக்கா ஹலாலா, பல தார விவகாரம் ஆகியவற்றை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும்: உச்ச நீதிமன்றம்

பிப்ரவரி 14

முத்தலாக் விவகாரத்துக்கு எதிரான அனைத்து மனுக்களும் விசாரணைக்கு ஏற்பு

2016, டிசம்பர் 9

முத்தலாக் சட்டவிரோதம், அரசியலமைப்புக்கு எதிரானது: அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அக்டோபர் 7

முத்தலாக்குக்கு எதிரான அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவித்தது மத்திய அரசு

2015, அக்டோபர்

முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி முஸ்லிம் தனி நபர் சட்டத்துக்கு எதிராக ஷயீரா பானு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல்

இதையும் படிக்கலாம்:

BBC Tamil
English summary
The Supreme Court has given a historic judgment on triple talaq today. Here is the timeline of the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X