For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்கார் ராஜினாமா

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநிலத்தில் 15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

திரிபுராவுக்கு கடந்த 18-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று அதன் தேர்தல் முடிவுகள் வெளியாகின.

Tripura CM Manik Sarkar resigns

இதில் திரிபுரா பூர்வக் குடிகள் கட்சி- பாஜக கூட்டணி 43 இடங்களில் (இவற்றில் பாஜக 35) வெற்றி பெற்றது. கடந்த 25 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் வெற்றி பெற்றதால் ஆட்சி அமைக்கும் உரிமையை இழந்தது.

20 ஆண்டுகளாக முதல்வராக இருந்த மாணிக் சர்க்கார் சொந்த வீடு இல்லாதவர். அவருக்கு கிடைக்கும் ஊதியத்தையும் கட்சிக்கே கொடுத்து விட்ட நிலையில் அவரது குடும்பத்தை அரசு அலுவலகத்தில் பணிபுரியும் மனைவிதான் கவனித்து வந்தார்.

இத்தகைய எளிமையான ஏழைகளின் முதல்வரை மக்கள் புறக்கணித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆளுநர் ததகதா ராயை முதல்வர் மாணிக் சர்க்கார் அவரது ஆளுநர் மாளிகையில் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

எனினும் மாணிக் சர்க்கார் சட்டசபை உறுப்பினராக தனது கடமையை ஆற்றுவார். அவர் தன்பூர் தொகுதியின் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

English summary
Tripura CM Manik Sarkar resigns from the post as his party lose in assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X