For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாஸ்க் போடலையா.. காய்கறி தர முடியாது.. கொரோனா பாடம் நடத்தும் திரிபுரா சந்தை

Google Oneindia Tamil News

அகர்தலா: முக கவசம் அணியாமல் வந்தால் எவ்வளவு பணம் தந்தாலும் காய்கறியை விற்பனை செய்ய மாட்டோம் என்று பிடிவாதம் காட்டி அசத்துகின்றனர் திரிபுரா காய்கறி வியாபாரிகள்.

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை அரசுகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. பொதுமக்களில் பலர் இதை கடைபிடித்தாலும் சிலர் துச்சமாக மதிப்பதும் உண்டு.

Tripura market teaches Coronavirus precautions

கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்ப லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. ஆனாலும் லாக்டவுனையும் மீறி ஊர்சுற்றும் கும்பல் உலா வரத்தான் செய்கிறது. அதுவும் காய்கறி வாங்கப் போவதாக போலீசாரிடம் கதை அளந்துவிடுகிறவர்கள்தான் அதிகம்.

ஆனால் இத்தகைய ஊர் சுற்றிகளின் சேட்டைகளுக்கு திரிபுரா வியாபாரிகள் சரியான பதிலடி தருகின்றனர். ஆம் திரிபுராவின் மிகப் பெரிய காய்கறி சந்தையான Maharajganj Bazaar-ல் எந்த கடைக்குப் போனாலும் ஒரு விளம்பரத்தைப் பார்க்க முடியும்.

கொரோனாவில் உயிரை விட்டால் ஆறடி மண் கூட கொடுக்க மாட்டீங்களா? - டாக்டர் அழகு தமிழ் செல்வி உருக்கம்

நீங்கள் முக கவசம் அணியாவிட்டால் காய்கறி தரமாட்டோம் என்பதுதான் அந்த வாசகம். ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியிலான இந்த விளம்பரம் அனைத்து கடைகளிலும் உள்ளது. தற்போது இதே பாணியை திரிபுராவின் இதர நகர சந்தைகளும் பின்பற்ற உள்ளன.

முகக் கவசம் மட்டுமல்ல தனிநபர் இடைவெளியையும் இங்கே கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டும். போலீசிடமும் வசமாக சிக்கவும் வேண்டும்..

அருமையான பாடம்!

English summary
Tripura's Maharajganj Bazaar traders put up boards saying No Mask, No Vegetables for the Coronavirus precaution.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X