For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தரகாண்ட் முதல்வராகப் பதவியேற்றார் திரிவேந்திர சிங் ராவத் ... பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

உத்தரகாண்ட் மாநிலத்தின் 8 வது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார்.

By Vazhmuni
Google Oneindia Tamil News

டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தின் 8 வது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜ.க தலைவர் அமித் ஷா, முன்னாள் முதல்வர் ஹர்ஷ் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் , கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று அதன் முடிவகள் அறிவிக்கப்பட்டன.

Trivendra Singh Rawat sworn in as Uttarakhand CM

உத்தரகாண்டில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 57 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதன்மூலம் தனிப்பெரும்பான்மையுடன் உத்தரகாண்டில் பாஜக ஆட்சியை பிடித்தது.மேலும் காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், மற்ற கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டசபைக்கான ஆளும்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக பாஜகவின் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத்தை, உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டசபைத் தலைவராகவும், முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நேற்று ஆளுநர் கே.கே. பாலை சந்தித்து திரிவேந்திர சிங் ராவத் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதற்கு ஆளுநர் பால், ராவத்தை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில் இன்று டேராடூனில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் முன்னிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் 8 வது முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றுக் கொண்டார். மேலும் ஆளுநர் கே.கே.பால், ராவத்துக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். திரிவேந்திர சிங் ராவத்தை தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜ.க தலைவர் அமித் ஷா, முன்னாள் முதல்வர் ஹர்ஷ் ராவத் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்டு புதிய முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

English summary
Trivendra Singh Rawat took oath as the Uttarakhand’s 9th Chief Minister in presence of Prime Minister Narendra Modi and BJP’s national president Amit Shah at Parade ground in Dehradun on Saturday afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X