For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்டிங்... ஷேவிங்.. குக்கிங்.. எதா இருந்தாலும் பண்றேங்க.. ஓட்டு மட்டும் போட்ருங்க போதும்!

தெலுங்கானாவில் தொகுதி மக்களை கவர வேட்பாளர்களின் செயல்கள் வைரலாகி வருகின்றன.

Google Oneindia Tamil News

தெலுங்கானா: தேர்தல் நெருங்க நெருங்க... அரசியல்வாதிகள் மக்கள் கிட்ட ஓடிவருவாங்க... இது நம் நாட்டில் தெரிந்த சங்கதிதான். ஆனால் தெலுங்கானாவில் ஒரு வேட்பாளர் ரொம்பவே நெருங்கிட்டார்... அது எந்த அளவு நெருக்கம் தெரியுமா?

தெலுங்கானாவில் சட்டசபைத் தேர்தல் வரப்போகிறது. இதற்காக பிரச்சாரங்கள் சூடு பிடித்து அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து கொண்டும், வாக்குகளை சேகரித்து கொண்டும் வருகிறார்கள். ஆனால் இதில் ஒரு வேட்பாளருடைய செயல்கள் மட்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் சூடான பஜ்ஜி சாப்பிடும் நேரம் வந்துவிட்டது... சென்னையில் லேசான மழை தமிழகத்தில் சூடான பஜ்ஜி சாப்பிடும் நேரம் வந்துவிட்டது... சென்னையில் லேசான மழை

சமைத்து போடுகிறார்

சமைத்து போடுகிறார்

சங்கரரெட்டி தொகுதியின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் வேட்பாளர்தான் சிந்தியா பிரபாகர். இவர் ஓட்டுக்களை பெற மக்கள் மேல் பொழிந்த பாசத்துக்கு அளவே இல்லை. நேராக தொகுதியில் உள்ள மக்களில் ஒருவரது வீட்டுக்குள் நுழைந்து கிச்சனுக்கு போய் சமைக்க ஆரம்பித்து விடுகிறார். கரண்டியும் கையுமாக வேட்பாளர் தங்களுக்கு சமைத்து போடுவதை பார்த்து வீட்டு நபர்கள் எல்லாம் விழித்து நிற்கிறார்கள்.

பாச மழைதான்

பாச மழைதான்

பிறகு வயதானவர்கள் யாராவது தன் கண்ணில் பட்டுவிட்டால் ஓடிப் போய் கட்டிப்பிடித்து கொள்கிறார். அவர்களது உடல்நலத்தை விசாரிப்பதுடன், பென்ஷன் எல்லாம் ஒழுங்கா கிடைக்குதா என கேட்டு பாசத்தாலேயே நனைய வைக்கிறார். இப்படி இவர் மட்டுமில்லை... கிட்டத்தட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் இப்படித்தான் தொகுதிகளில் இறங்கியுள்ளனர்.

கட்டிங் ஷேவிங்

கட்டிங் ஷேவிங்

பெண்களை மட்டும் வேட்பாளர் கவரவில்லை.. தொகுதி ஆண்களுக்கு ஒரு தனி ஸ்டைல் வைத்திருக்கிறார்கள். அதாவது கட்டிங், ஷேவிங்!! கொஞ்சம் தாடி வைத்து யார் இருந்தாலும் சரி, உடனே கட்டிங், ஷேவிங்தான். இதை மட்டும் செய்தால் பரவாயில்லை... இதனை தொடர்ந்து அவர்களை குளிப்பாட்டும் அளவிற்கும் சென்றுள்ளனர்.

பாடை தூக்குகிறார்

பாடை தூக்குகிறார்

இதில் சித்திபேட் தொகுதி வேட்பாளர் ஹரிஷ் ராவ் ஒரு படி மேலேபோய், இதற்காக ஆட்களையே அப்பாய்ண்ட் பண்ணிட்டார். அனுபவம் வாய்ந்தவர்களை கட்டிங், ஷேவிங் இலவசமாக செய்யசொல்லி இருக்கிறார். அதுமட்டும் இல்லை, எந்த வாக்காளர் வீட்டில் சாவு நடந்தாலும் உடனே பாடையை தூக்கும் வேலைகளிலும் இறங்கி விடுகிறார்கள்.

முகம் சுளிக்கின்றனர்

முகம் சுளிக்கின்றனர்

இந்த காட்சிகள் எல்லாத்தையும் பார்த்த தொகுதி மக்கள் சந்தோஷப்படுவார்களா என்ன? இல்லை.. இப்படி ஓட்டை வாங்க அடிமட்ட நிலைக்கு போய் விட்டார்களே என்று வருத்தப்படுவதுடன், முகம் சுளிக்கவும் செய்கிறார்கள். சிலருக்கு கோபமே வந்துவிடுகிறது. இப்படி வேட்பாளர்களின் செயல்கள் புகைப்படங்களாக இணையத்தில் வெளியாகி எல்லோருக்கும் இன்னும் ஆத்திரத்தைதான் ஏற்படுத்தி வருகிறது.

English summary
TRS Leaders, candidates help Cooking, bathing for Telangana polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X