For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஷாருக்கான் ஓகே.. ரஜினியை பற்றி.. ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தை கூட சொல்லலையே டிரம்ப்..!

நடிகர் ரஜினிகாந்த் பற்றி பேச தவறிவிட்டார் அதிபர் டிரம்ப்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: ஷாருக், சச்சின் போன்றவர்களை பற்றி குறிப்பிட்டும், புகழ்ந்தும் பேசிய அதிபர் டிரம்ப, நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பற்றி சுட்டிக்காட்டி பேசாதது வருத்தமளிக்கிறது.. தமிழ் சினிமாவை புறக்கணிக்கும் போக்காகவே இது கருதப்படுகிறது!

Recommended Video

    Trump India Visit|டிரம்ப்பின் இந்திய வருகை... பின்னணி என்ன ?

    நடிகர் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை நமக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.. அவரது பேச்சுக்கள் சர்ச்சையாக்கி விமர்சிக்கலாம்.. ஆனால் அது எல்லாமே நமக்குள்தான்.. பொதுப்படையாக வந்துவிட்டால், அதுவும் இந்திய சினிமா என்ற பேச்சு வந்துவிட்டால் நடிகர் ரஜினிகாந்த்தை தவிர்த்துவிட்டு நம்மால் பேசமுடியாது!

    ரஜினிகாந்த் மிக சிறந்த உழைப்பாளி.. ஏழ்மையில் இருந்து திறமையை மட்டுமே கையில் பிடித்து கொண்டு சினிமாவில் நுழைந்தவர்.. சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற இவர் பட்ட பாடு கொஞ்சம்-நஞ்சமில்லை.. இந்திய அளவிலும் சரி.. அன்று இந்தி உலகில் அமிதாப் என்றால், அடுத்த பெயர் ரஜினிகாந்த்தான்.. இன்றும்கூட ஷாருக்கானை விட மிகப் பெரிய மார்க்கெட் உள்ள ஒரு நடிகர்.

     70 வயது

    70 வயது

    ஏன்... ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர்... இந்திய திரையுலகுக்கு வெளிநாடுகளில் பெரிய மார்க்கெட்டைத் தேடித் தந்த முக்கியமான நடிகரும் ரஜினிகாந்த்தான்.. வயது 70 ஆகிவிட்டாலும் பல கோடிகளை கொட்டி ரஜினியை வைத்து படம் பண்ண எத்தனையோ பேர் தயாராக உள்ளனர்.. இதற்கு காரணம் ரஜினிகாந்த்துக்கு அன்றிலிருந்து இன்றுவரை குறையாமல் இருக்கும் மவுசுதான்.

     பாஜக அரசு

    பாஜக அரசு

    இவருக்குள்ள புகழை பார்த்துதான், தனக்கு சாதகமாக்கி கொள்ள பாஜக அரசு முயன்று வருகிறது.. பலவாறாக பலவகையில் ரஜினிக்கு முட்டு கொடுத்து தூக்கி வருகிறது.. ஆனால், இன்று நாட்டில் மிக முக்கியமான நிகழ்வு நடந்து வருகிறது.. அமெரிக்காவில் இருந்து அதிபர் வந்துள்ளார்.. அதுவும் முதல்முறையாக வந்திருக்கிறார்.. வந்தவர் இரு நாட்டுக்கும் பொதுவான விஷயங்களை பற்றி பேசியிருந்தால் பரவாயில்லை.. ஆனால், அமெரிக்காவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத சச்சின், கோலி குறித்தெல்லாம் சிலாகித்து பேசியுள்ளார் டிரம்ப்.

    செல்வாக்கு

    செல்வாக்கு

    அதேசமயம், அமெரிக்க வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்குடன் உள்ள ரஜினி குறித்து வாயே திறக்கவில்லை.. ஒருவேளை ரஜினி பற்றி டிரம்புக்கு தெரியவில்லையா? அப்படி வாய்ப்பிருப்பதாகவும் கருத முடியவில்லை.. ஏனெனில் ஜப்பானில் ரஜினி எந்த அளவுக்கு புகழ்பெற்றவர் என்பது உலகமே அறியும்.. அவ்வளவு ஏன், உலக அளவில்‌ புகழ்‌ பெற்ற டிஸ்கவரி சேனல் கூட ரஜினிகாந்த்தை வைத்து நிகழ்ச்சி தயாரிக்க முன்வந்ததையும் உலகமறியும்.

     வருத்தம்

    வருத்தம்

    ஒருவேளை டிரம்புக்கு ரஜினிகாந்த் பற்றி தெரிய வாய்ப்பில்லை என்றாலும், பாஜக தரப்பிலாவது அவரை பற்றி எடுத்து சொல்லி இருக்கலாம்.. ரஜினியின் ஆதரவு வேண்டும் என்ற இன்றுவரை காத்து கிடக்கும்போது, ரஜினியின் புகழை பற்றி இன்னொரு நாட்டினருக்கு எடுத்து சொல்லாதது நமக்கு வருத்தத்தை தருகிறது.. வடக்கு வாழுகிறது.. தெற்கு தேய்கிறது என்பது இன்னமுமா நம் நாட்டில் நிலவி வருகிறது? ரஜினி மீது ஆயிரம் விமர்சனம் நமக்கு இருந்தாலும், ஒரு உச்ச நடிகரை பற்றி பேசாததும், எடுத்து சொல்லாததும் தமிழகத்துக்கு மிகப்பெரிய இழுக்கு என்றுதான் சொல்ல வேண்டும்!

    English summary
    President Trump made no mention of Rajini in his speech
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X