For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் பழமையான மொழி சமஸ்கிருதம்.. அதில் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி.. நமஸ்தே டிரம்ப்.. மோடி உரை!

நமஸ்தே என்பது உலகின் மிகவும் பழமையான மொழியான சம்ஸகிருத மொழியை சேர்ந்த வார்த்தை, அதில் அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: நமஸ்தே என்பது உலகின் மிகவும் பழமையான மொழியான சமஸ்கிருத மொழியை சேர்ந்த வார்த்தை, அதில் அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் இந்திய அரசுமுறை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று அகமதாபாத்தில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கூடியுள்ள மொதேரா அரங்க மேடையில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மக்கள் முன்னிலையில் பேசினார்கள்.

    இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த விழாவில் 3 முறை நமஸ்தே ட்ரம்ப் என கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

     தாஜ்மகாலுக்கு டபுள் ஓகே.. பட்டேல் சிலைக்கு நோ.. அதிபர் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. ஏன் இப்படி? தாஜ்மகாலுக்கு டபுள் ஓகே.. பட்டேல் சிலைக்கு நோ.. அதிபர் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. ஏன் இப்படி?

    மோடி பேச்சு

    மோடி பேச்சு

    பிரதமர் மோடி தனது பேச்சில், நான் இப்போது பார்க்கிறேன். வரலாறு மீண்டும் திரும்பி இருக்கிறது. 5 மாதங்களுக்கு முன் நான் அமெரிக்காவிற்கு ஹவுடி மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றேன். இன்று என் நண்பர், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இந்தியாவில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் இந்தியா வந்துள்ளார். உலகின் மிகப்பெரிய குடியரசுக்கு உங்களை வரவேற்கிறேன்.

    குஜராத் எப்படி

    குஜராத் எப்படி

    இது குஜராத். ஆனால் மொத்த நாடும் உங்களை மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கிறது. இந்தியா பன்முகத்தன்மை கொண்டது. பல மொழி, பல கலாச்சாரம் நம்முடைய நாட்டில் இருக்கிறது. இந்த நாட்டிற்கு உங்களை வரவேற்கிறேன். இந்த சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் இன்று புதிய வரலாறு படைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்டு உறவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும்.

    என்ன சிலை

    என்ன சிலை

    அமெரிக்காவில் இருப்பது சுதந்திர தேவி சிலை, இங்கு இருப்பது ஒற்றுமைக்கான சிலை. நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து இருக்கிறோம். களைப்பு இல்லாமல் இந்தியர்களை சந்திக்க வந்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். முதல் குடிமக்கள் மெலினியா வருகையால் நாங்கள் பெருமை அடைகிறோம். நீங்கள் அமெரிக்காவிற்காக செய்த பணிகள் வியக்க வைக்கிறது. அதற்கான பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் பணிகளை பாராட்டுகிறோம்.

    நமஸ்தே எப்படி

    நமஸ்தே எப்படி

    இந்த நிகழ்ச்சிக்கு நமஸ்தே என்று பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது. நமஸ்தே என்பது உலகின் மிகவும் பழமையான மொழியான சமஸ்கிருத மொழியை சேர்ந்த வார்த்தை. இதன் அர்த்தம் மரியாதையை செலுத்துவது ஆகும். அதேபோல் ஒருவருக்குள் இருக்கும் தெய்வீகதன்மையையும் காட்டும். நமஸ்தே ட்ரம்ப், ட்ரம்ப் நீடுழி வாழ்க வேண்டும், என்று மோடி தனது பேச்சில் குறிப்ப்பிட்டார்.

    English summary
    Trump India Visit: I am happy to welcome you in Sanskirt as the president says, PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X