For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாஜ்மகாலுக்கு டபுள் ஓகே.. பட்டேல் சிலைக்கு நோ.. அதிபர் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. ஏன் இப்படி?

இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், குஜராத்தில் இருக்கும் உலகின் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பார்வையிடாமல் தவிர்த்தது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், குஜராத்தில் இருக்கும் உலகின் உயரமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பார்வையிடாமல் தவிர்த்தது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.

Recommended Video

    Trump india visit | சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் இந்திய அரசுமுறை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் நாளையும் அவர் இந்தியாவில் முக்கிய இடங்களை பார்வையிட இருக்கிறார்.

    இந்தியா வந்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவில் பாரம்பரியமான வரலாற்று சின்னங்களை பார்வையிடுகிறார். இன்று காலை குஜராத் வந்த அவர் நேரடியாக சென்று சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்.

    மைதானம்

    மைதானம்

    அதன்பின் அஹமதாபாத் மைதானத்தில் மக்கள் முன்னிலையில் பேசுகிறார். இதுதான் உலகின் பெரிய மைதானம் ஆகும். இங்குதான் டிரம்ப் பேசுகிறார். அவரின் இந்த நிகழ்ச்சிக்கு நமஸ்தே டிரம்ப் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பின் இன்று மாலை அவர் உத்தர பிரதேசம் செல்கிறார். அங்கு ஆக்ராவில் அவர் தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்.அதேபோல் உத்தர பிரதேசத்தில் இருக்கும் சில வரலாற்று நினைவுச்சின்னங்களை பார்வையிடுகிறார்.

    டெல்லி மாலை

    டெல்லி மாலை

    அதன்பின் மாலைக்கு பிறகு அவர் டெல்லியில் சென்று சொகுசு விடுதியில் தங்க உள்ளார்.நாளை அவர் டெல்லியில் உள்ள அரசு பள்ளி ஒன்றை பார்வையிடுகிறார். இந்த நிலையில் குஜராத் வரை வரும் அதிபர் டிரம்ப் ஏன் குஜராத்தில் இருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பார்வையிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி கடந்த 2018ல் திறந்து வைத்தார்.

    ஒற்றுமை சிலை

    ஒற்றுமை சிலை

    இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும். இதன் உயரம் 182 அடியாகும். சீனாவின் ஸ்பிரிங் டெம்பிள் புத்தரின் 177 மீட்டர் சிலை கொண்டிருந்த பெருமையை இது முறியடித்துள்ளது.

    பெரிய உயரம்

    பெரிய உயரம்

    அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இது இரண்டு மடங்கு உயரம் கொண்டது ஆகும். இவ்வளவு சிறப்பு கொண்ட சிலையை பார்வையிடாமல் டிரம்ப் ஏன் டெல்லி செல்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் அடையாளம் இந்த சிலைதான் என்று மோடி பேசி வந்தார். ஆனால் அதையே டிரம்ப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. உத்தர பிரதேச பாஜக அரசு தாஜ்மஹாலை புறக்கணித்து வந்தது.

    சுற்றுலா துறை

    சுற்றுலா துறை

    தங்கள் மாநில சுற்றுலா பட்டியலில் இருந்து கூட தாஜ்மஹாலை அம்மாநில அரசு நீக்கியது . அதேபோல் தாஜ்மஹாலுக்கான பராமரிப்பு பணிகளையும் அம்மாநில அரசு புறக்கணித்து வந்தது. ஆனால் இத்தனையையும் மீறி, தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாஜ்மாஹலை பார்வையிட வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரின் இந்திய பயணத்தில் தாஜ்மஹால் மிக முக்கியமான இடம் பிடித்துள்ளது. பாஜக அரசுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம்தான்.

    பயண திட்டம்

    பயண திட்டம்

    ஆனாலும் அதிபரின் பயண திட்டத்தில் இந்தியா பெரிய அளவில் தலையிட முடியாது. பிரதமர் மோடி பார்த்து பார்த்து கட்டிய 182 அடி பட்டேல் சிலை இருக்கும் போது, தாஜ்மஹாலை டிரம்ப் பார்வையிடுகிறார். ஆனால் அவரின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று இன்னும் முழுதாக தகவல் வெளியாகவில்லை. வரலாற்று ரீதியாக தாஜ்மஹால் பெரிய புகழ் கொண்டது. அதனால் அவர்கள் இதை தேர்வு செய்து இருக்கலாம். இந்தியா என்றால் தாஜ்மஹால் என்ற பிம்பம் இன்னும் உலக அரங்கில் உயர்ந்து நிற்கிறது. அதிபர் டிரம்பின் வருகைக்கு பின் தாஜ்மஹாலை மேலும் அதிக அளவில் மக்கள் பார்க்க வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Trump India Visit: The president not interested in visiting the Statue of Unity built by PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X