For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் வரி விதிப்பு முறையால் ட்ரம்ப் கோபம்.. பதிலடி தர வேண்டும் என்று சீற்றம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியாவின் வரி விதிப்பு முறையால் கோபப்பட்ட ட்ரம்ப்

    டெல்லி: ஹார்லி டேவிட்சன் மோட்டார் பைக் மீதான இந்தியாவின், வரி விதிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

    வெள்ளைமாளிகையில், அமெரிக்க எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தியபோது ட்ரம்ப் இக்கருத்தை வெளியிட்டுள்ளதோடு, இந்தியா ஏற்றுமதி செய்யும் மோட்டார் சைக்கிள்கள் மீது வரி விதிக்க ஆலோசிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

    ஹார்லி டேவிட்சன்

    ஹார்லி டேவிட்சன்

    டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக வெளியான தகவல்கள் இவைதான்: நமது நாட்டு மோட்டார் சைக்கிள் ஹார்லி டேவிட்சன், அந்த நாடுகளுக்குள் செல்லும்போது அதிகப்படியான வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா ஒரு நாடு என்பதை நான் சொல்ல தேவையில்லை.

    வரியை குறைத்துள்ளார்களாம்

    வரியை குறைத்துள்ளார்களாம்

    ஒரு 'கிரேட் ஜென்டில்மேன்' என்னுடன் தொலைபேசியில் பேசினார். இப்போது நாங்கள் மோட்டார் சைக்கிள் மீதான வரிகளை குறைத்துள்ளோம், 75 சதவீதம் வரியை 50 சதவீதமாக குறைத்துள்ளோம், சில பைக்குகளுக்கு வரியே இல்லை என்று அவர் தெரிவித்தார். இவ்வாறு ட்ரம்ப் கூறியது இந்தியாவைத்தான் என தெரிகிறது. இந்தியா உயர்தர மோட்டார் சைக்கிள் மீதான வரியை 50 சதவீதம் வரை குறைத்திருந்தது.

    அமெரிக்காவில் வரி இல்லை

    அமெரிக்காவில் வரி இல்லை

    ட்ரம்ப் மேலும் கூறுகையில், ஹார்லி டேவிட்சன் பைக்குகள் இறக்குமதி வரியை செலுத்தும் நிலையில், இந்திய நிறுவன பைக்குகள் ஆயிரக்கணக்கில் வரி இல்லாமல் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன. பதிலுக்கு நாமும் வரி விதிக்க வேண்டியது தேவைப்படுகிறது. இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

    அதிகம் இல்லை

    அதிகம் இல்லை

    இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்குகள், ஆண்டுக்கு சராசரியாக 3,700 என்ற அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா இந்தியாவிடமிருந்து அதிகப்படியாக பைக்குகளை இறக்குமதி செய்யவில்லை. இருப்பினும் ட்ரம்ப் இவ்வாறு பதிலுக்கு பதில் வரி போடுவோம் என பேசியுள்ளார்.

    English summary
    President Donald Trump on Tuesday cited once again tariff imposed by India on Harley-Davidson motorcycles as an example of “unfair” trade practice.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X