For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கழுவி ஊற்றிய இஸ்ரேல் இயக்குநர்.. “உண்மை ரொம்பவே ஆபத்து” - கருத்து சொன்ன காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர்

Google Oneindia Tamil News

பானாஜி: கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்பு பிரச்சாரம் பரப்பும் இழிவான படம் தேர்வுக்குழு தலைவர் நாதன் லாபிட் விமர்சித்த நிலையில் அப்படத்தின் இயக்குநர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் வெளியானது. அக்னிஹோத்ரி மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் இதில் நடத்தனர்.

இந்த திரைப்படம் ரிலீசான சமயத்தில் தேசிய அரசியலில் விவாதப் பொருளாக மாறியது. ஜம்மு காஷ்மீரில் 80 களின் பிற்பகுதியில் ஏற்பட்ட வன்முறையின்போது காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதாக இந்த படத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெட்கப்படுறேன்.. வேதனைப்படுறேன்! காஷ்மீர் பைல்சை விமர்சித்த இயக்குநருக்கு இஸ்ரேல் தூதர் கண்டனம் வெட்கப்படுறேன்.. வேதனைப்படுறேன்! காஷ்மீர் பைல்சை விமர்சித்த இயக்குநருக்கு இஸ்ரேல் தூதர் கண்டனம்

 பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி பாராட்டு

இந்த படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும் படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், கோவா, திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகா, அரியானா, குஜராத், உத்தராகண்டில் இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டன. மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படத்தை பார்க்க செல்லும் அரசு ஊழியர்கள், போலீசாருக்கு ஒருநாள் விடுப்பு அளிக்கப்பட்டது.

 கோவா திரைப்பட விழா

கோவா திரைப்பட விழா

ஆனால், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மதவெறுப்பை பரப்பும் வகையில் உள்ளதாக காங்கிரஸ், இடதுசாரிகள், இஸ்லாமிய அமைப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட திருவிழாவுக்கு இந்த திரைப்படத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை தேர்வு செய்தபோதும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

 ஜெய்பீம் படம்

ஜெய்பீம் படம்

இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி கோவாவில் 53 வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியது. இதில் 79 நாடுகளை சேர்ந்த 280க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. குறிப்பாக கடந்த ஆண்டு தமிழில் வெளியான இருளர் பழங்குடி மக்களுக்கு எதிரான தீண்டாமை கொடுமைகளையும், லாக் அப் மரணங்களின் வலியையும் பேசிய தா.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் திரையிட்டு காட்டடப்பட்டது.

 காஷ்மீர் பைல்ஸ்

காஷ்மீர் பைல்ஸ்

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற திரைப்பட திருவிழாவின் நிறைவு விழாவில் உலக புகழ்பெற்ற சினிமா கலைஞர்கள் நிறைந்திருந்த அரங்கத்தில் திரைப்பட திருவிழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார். காஷ்மீர் பைல்ஸ் வெறுப்புணர்வை பரப்பும் இழிவான படம் அவர் கடுமையான சாடினார்.

 நாதவ் லாபிட்

நாதவ் லாபிட்

"பெருமை மிகுந்த கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் பொறுத்தமற்ற இந்த படத்தை தேர்வு செய்துள்ளது அதிர்ச்சி தருகிறது. இந்த திரைப்படத்தால் நாங்கள் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தோம். காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட திருவிழாவுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு மேடையிலேயே நாங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம்." என்று அவர் கூறினார்.

 விவேக் ரஞ்சன் கருத்து

விவேக் ரஞ்சன் கருத்து

நாதவ் லேபிடின் இந்த கருத்து கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நார் கிலான், "காஷ்மீர் பைல் குறித்த விமர்சனத்துக்கான இயக்குநர் நாதவ் லாபிட் வெட்கப்பட வேண்டும்." என்றார். இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு உள்ள காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, "உண்மை மிகவும் ஆபத்தான ஒன்று. அது மக்களை பொய் சொல்ல வைக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

English summary
The Kashmir Files director Vivek Agnihotri tweeted that, "Truth is the most dangerous thing. It can make people lie." after criticized by the chairman of
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X