For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிடி பருத்தி விதைகளை அறிமுகம் செய்து விவசாயிகளின் தற்கொலைக்கு பொறுப்பேற்ற டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்

நாட்டில் விவசாயிகள் தற்கொலைக்கு காரணமான பிடி பருத்தி விதைகளை அறிமுகம் செய்தவர்தான் மறைந்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளின் தற்கொலைக்கு பொறுப்பேற்ற டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்- வீடியோ

    டெல்லி: மறைந்த மத்திய அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தாம் மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலாளராக பதவி வகித்த காலத்தில்தான் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளை நாட்டுக்கு அறிமுகம் செய்தார். இந்த பிடி பருத்தி விதைகள் பலன் தராமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்ய நேரிட்ட போது இம் மரணங்களுக்கு பொறுப்பேற்பதாகவும் கூறியவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன்.

    தமிழகத்தின் தஞ்சையை பூர்வீகமாக கொண்டவர் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன். 1961-ம் ஆண்டு உத்தரப்பிரதேச கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்தார்.

    1990-ல் மத்திய ஜவுளித்துறை அமைச்சக செயலாளராகவும் இருந்தார். அப்போதுதான் நாட்டில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிடி பருத்தி விதைகள் அறிமுகம் செய்யப்பட்டன.

    விவசாயிகள் தற்கொலை

    விவசாயிகள் தற்கொலை

    ஆனால் இப்பருத்தி விதைகள் பலன் தரவில்லை. மாறாக விளைநிலங்களை மலடாக்கியது. இதனால் நாடு முழுவதும் பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்ய நேரிட்டது.

    மரணங்களுக்கு பொறுப்பேற்பு

    மரணங்களுக்கு பொறுப்பேற்பு

    பின்னர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை நாட்டுக்கு அறிமுகம் செய்தது நானே.. அதனால் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு நானே பொறுப்பு என பகிரங்கமாக பேசினார்.

    சர்ச்சையான புதிய கல்வி கொள்கை குழு

    சர்ச்சையான புதிய கல்வி கொள்கை குழு

    அதேபோல் கடும் சர்ச்சைக்குள்ளான மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் இருந்தார் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் கபிசிபல், இக்குழுவை விமர்சித்தார்.

    கபில் சிபல் மீது தாக்கு

    கபில் சிபல் மீது தாக்கு

    இதற்கு பதிலளித்த டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன், கபில் சிபலுக்கு ராகுல் காந்தியை பாதுகாக்கவே நேரமில்லையே என விமர்சித்ததும் சர்சையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Former Cabinet Secretary TSR Subramanian who passed away today, introduced GM cotton in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X