For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரம்மோற்சவ விழாவிற்கு தயாராகும் திருப்பதி: இன்று ஆழ்வார் திருமஞ்சனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 26-ந் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்க உள்ளதை ஒட்டி கோவிலை தூய்மைபடுத்தும் இன்று காலையில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.

ஏழுமலையான் கருவறை முதல் ராஜகோபுரம் வரை சுத்தம் செய்யப்பட்டதால் காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்தது.

சுப்ரபாதம், தோமாலை சேவைகள் மட்டும் ஏழுமலையானுக்கு தனிமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

பிரம்மோற்சவ கொடியேற்றம்

பிரம்மோற்சவ கொடியேற்றம்

பிரம்மோற்சவத்தை யொட்டி வருகிற 25-ஆம் தேதி அங்குரார்பணம் நடக்கிறது. வெள்ளிக்கிழமை (26-ஆம் தேதி) கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்குகிறது. அக்டோபர் 4-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

கருடசேவை

கருடசேவை

முக்கிய நிகழ்வான கருட சேவை வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்விளக்கு அலங்காரம்

மின்விளக்கு அலங்காரம்

பிரமோற்சவத்தையொட்டி கோவில் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலர் அலங்காரமும் செய்யப்படுகிறது.

நேரடி தரிசனம் ரத்து

நேரடி தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முதியோர், ஊனமுற்றோருக்கான நேரடி தரிசனமுறை உள்ளது. பிரம்மோற்சவ விழா நாட்களில் இந்த நேரடி தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

English summary
As a prelude to the nine-day mega religious fete of Srivari Brahmotsavams, TTD will perform the temple cleansing ritual ‘Koil Alwar Thirumanjanam’ on Tuesday at the hill shrine of Lord Venkateswara in Tirumala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X