For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பதி தேவஸ்தான கணனிகளிலும் ரான்சம்வேர் அட்டாக்! இணையதளம் முடக்கம்!

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தேவஸ்தானத்தின் இணையதளமும் முடக்கப்பட்டுள்ளன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருப்பதி: ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் திருப்பதி தேவஸ்தானத்தின் கணினிகள் பாதிக்கப்பட்டு இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வான்னாக்ரை என்ற புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகின்றன. இதை ஹேக்கர்கள் ஏவியுள்ளனர். பணம் பறிக்கும் நோக்கில் இந்த வைரஸை இந்தக் கும்பல் ஏவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.

TTD's computers are freezed by Ransomware Virus

இந்தியாவிலும் கூட இந்த வான்னக்ரை வைரஸ் பரவியுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் கம்ப்யூட்டர்களை இது தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வைரஸால் ஏடிஎம் சேவைகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் உள்ள 10 கணினிகளில் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் நிர்வாக கோப்புகள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேவஸ்தானத்தின் இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.

English summary
A red-coloured critical alert was issued in connection with the WannaCry attack that hit over 90,000 systems across 75 countries across the world including India. TTD's computers are also affected by virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X