For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் கதவைத் தட்டும் தினகரன்...தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கேட்டு மனு!

தேர்தல் ஆணைய்ததில் இன்று நடைபெறும் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெற இருக்கும் விசாரணையை ஒத்திவைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயரைப் பெற கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்க உத்தரவிடுமாறு டிடிவி தினகரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஹைகோர்ட் கிளை நேற்று தள்ளுபடி செய்தது.

TTV Dinakaran moved SC in Party symbol hearing at Election comission

இந்நிலையில் டிடிவி தினகரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில் இரட்டை இலை சின்ன விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெறும் விசாரணையை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சின்னம் பெற கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அவகாசம் அளிக்க உத்தரவிடக் கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை சிலை சின்னம் தொடர்பான விசாரணையை 4 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிற்பகலில் தேர்தல் ஆணையத்தில் சின்ன்ம தொடர்பான விசாரணை நடைபெற உள்ள நிலையில் தினகரன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
TTV Dinakaran moved Supreme court seeking ban to hear admk two leaves symbol at Election comission of India today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X