For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'லிப்ஸ்டிக்' வெடிகுண்டு மிரட்டல்.. டெல்லியில் துருக்கி விமானம் அவசர தரையிறக்கம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி சென்ற துருக்கி நாட்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான மிரட்டலை தொடர்ந்து டெல்லி ஏர்போர்ட்டில் விமானம் சல்லடையாக சோதித்து பார்க்கப்பட்டது.

பேங்காக்கில் இருந்து 148 பயணிகளை ஏற்றிக்கொண்டு, இஸ்தான்புல்லுக்கு இன்று மதியம், தர்கிஷ்ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது.

Turkish Airlines plane makes emergency landing at Delhi airport

இந்நிலையில், "இந்த விமானத்தின், சரக்கு வைக்கும் பகுதியில் வெடிகுண்டு உள்ளது" என்று விமான பாத்ரூம் கண்ணாடியில், லிப்ஸ்டிக்கில் யாரோ எழுதிவைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் பைலட்டுக்கு கிடைத்ததும், அவர் விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக, அருகிலுள்ள விமான நிலையம் எதுவென பார்த்து விமானத்தை தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. டெல்லி விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி, அங்கு தரையிறக்க அனுமதி பெறப்பட்டது. எனவே விமானம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் கட்டுப்பாட்டின்கீழ், விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சல்லடை போட்டு விமானத்தை சோதித்து பார்த்தனர். ஆனால், குண்டு கிடைக்கவில்லை. எனவே, பீதி கிளப்ப விஷமி யாரோ இதுபோல எழுதி வைத்திருக்க வேண்டும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

பயணிகள் அத்தனை பேரிடமும் பாதுகாப்பு அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தபோதிலும், விபரம் கிடைக்கவில்லை. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Turkish Airlines plane going towards Bangkok makes emergency landing at IGI airport following bomb scare.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X