For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி சுப்பிரமணியன்.. அரியலூர் சிவச்சந்திரன்… வீர மரணம் அடைந்தவர்கள் அடையாளம் தெரிந்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் நடந்த தாக்குதலில் தமிழக வீரர் மரணம்- வீடியோ

    ஜம்முகாஷ்மீர்:காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர் சுப்பிரமணியன் உள்பட 2 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

    புல்வாமா மாவட்டம், அவந்திபுராவில், ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், சிஆர்பிஎப் வீரர்கள் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரில் உள்ள முகாமுக்கு வீரர்கள் இந்த வாகனங்களில் சென்றனர்.

    Tuticorin soldier subramaniyan was killed in the deadly attack in jammu Kashmir

    மொத்தம் 70 வாகனங்கள் அணி வகுத்துச் சென்றன. அப்போது அவர்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டுகள் வெடித்தன. அதில் குண்டு வெடித்த வாகனத்தில் இருந்த ஏராளமான வீரர்கள் சிக்கிக் கொண்டனர். பயங்கர தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கேரளா, கர்நாடகாவை சேர்ந்த 2 பேரும் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    நாடு முழுவதும் இந்த தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்... அந்த தாக்குதலில் தமிழக வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் தாக்குதலில் பலியாகி உள்ளார்.

    சவலப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்பிரமணியனுக்கு அண்மையில் தான் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாக்குதல் நிகழ்ந்த அன்று மதியம் தமது குடும்பத்தினருடன் அவர் செல்போனில் பேசியிருக்கிறார். அதன் பிறகு... அவரது செல்போன் அனணத்து வைக்கப்பட்டு இருக்கிறது.சுப்பிரமணியனுடன், மற்றொரு தமிழக வீரரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாமல் இருந்தது. இந் நிலையில் வீர மரணம் அடைந்த மற்றொரு வீரர் அரியலூர் மாவட்டம் கார்க்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

    English summary
    Tuticorin soldier subramaniyan was killed in the deadly attack in jammu Kashmir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X