For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரோம் தோல்வி... இந்திய அரசியல் நேர்மையானவர்களுக்கு இல்லவே இல்லை... பொங்கும் நெட்டிசன்ஸ்!

மனித உரிமை போராளி இரோம் ஷர்மிளா தோற்கடிக்கப்பட்டதற்கு சமூக வலைதளங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: இரோம் ஷர்மிளாவை தோற்கடித்த மணிப்பூர் மக்கள் அவரை அரசியலில் இருந்தே விலகச் செய்துள்ளனர். 16 ஆண்டுகாலம் மக்களின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்த அவருக்கு வெறும் 90 வாக்குகளை மட்டுமே மணிப்பூர் தொகுதி மக்கள் அளித்துள்ளனர்.

இதனால் அரசியலில் இருந்தே விலகுவதாக இரோம் ஷர்மிளா அறிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக போராடிய அவரை தேர்தலில் தோற்கடித்திருப்பதற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இரோம் ஷர்மிளா அரசியலில் இருந்து விலகக்கூடாது என்றும் ஆதரவுகள் வலுத்து வருகின்றன.. அவற்றில் சில டிவிட்டுகள் உங்கள் பார்வைக்கு..

இது முடிவல்ல

இன்னும் யுத்தம் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஒரு குறை முடிவல்ல.. புதிய போருக்கான தொடக்கம்.. இரோம் ஷர்மிளா அரசியலில் இருந்து விலகக்கூடாது என கூறுகிறது இந்த டிவிட்.

இது அவமானம்..

இந்திய அரசியல் திருட்டுத்தனம் செய்பவர்களுக்கானது.. பொதுமக்களுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை பற்றி மக்கள் கவலை கொள்ள மாட்டார்கள் என சொல்கிறார் இந்த நெட்டிசன்.

அரசியல் நல்லவர்களுக்கானது அல்ல..

எல்லோரும் அரவிந்த் கெஜ்ரிவால் போல் தைரியமானவர்களாக பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பதில்லை எனத் தெரிவிக்கிறது இந்த டிவிட்.

இதை படிக்க சங்கடமாக உள்ளது..

அவருடைய பணியை அவர் முடித்துக்கொள்ளலாமா? அவர் அதிகாரத்துக்காக போராடவில்லை.. நீதிக்காக தான் போராடினார் இல்லையா? மக்களை நறுக்கென கேட்டுள்ளார் இந்த நபர்.

இது ஏமாற்றமளிக்கிறது..

அவர் வெற்றிக்கு தகுதியானவர்.. என இந்த வலைஞர் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இல்லவே இல்லை

இந்திய அரசியல் அப்பாவிகளுக்கும் நேர்மையானவர்களுக்கும் இல்லவே இல்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

English summary
Tweets and memes on Irom sharmila's defeat in the Manipur election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X