For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனி எந்த விமானமும் ஓடாது.. ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம கும்பல்!

ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர் இந்தியாவின் டிவிட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்து இருக்கிறார்கள். துருக்கியை சேர்ந்த சைபர் தீவிரவாத கும்பல் இந்த ஹேக்கிங்கை செய்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்களே இதை ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள். நேற்று இரவு டிவிட்டர் கணக்கை ஹேக் செய்யப்பட்டது.

பல்வேறு முயற்சிகளுக்கு பின் ஏர் இந்தியா மீண்டும் கணக்கை திரும்ப பெற்று இருக்கிறது. இதுகுறித்து சைபர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

என்ன

துருக்கியை சேர்ந்த குழு ஒன்றுதான் இதை செய்துள்ளது. ஏர் இந்தியா கணக்கில் இருந்து விமானம் ரத்தாகிவிட்டது, ஏர் இந்தியா இனி ஓடாது, இனி நாங்கள் துருக்கியுடன் இணைந்து செயல்பட போகிறோம் என்று வரிசையாக நிறைய டிவிட்டுகள் போட்டு இருக்கிறார்கள்.

ப்ளூ டிக்

மேலும் அவர்கள் ஏர் இந்தியா என்ற பெயரையும் டிவிட்டரில் மாற்றி உள்ளார்கள். இதனால் உடனே அந்த கணக்கில் ப்ளூ டிக் பறிபோனது. அதேபோல் ஏர் இந்தியா பயோ விவரத்திலும் விவரங்களை மாற்றி உள்ளார்கள்.

ஷேர் செய்தார்கள்

அது மட்டும் இல்லாமல் அந்த ஹேக்கிங் குழுவின் தனிப்பட்ட கணக்கில் உள்ள ஸ்டேட்டஸ்களை ஏர் இந்தியா கணக்கு மூலம் டிவிட்டரில் ஷேர் செய்து இருக்கிறார்கள். அவர்கள் பேசிய விஷயங்கள் அனைத்தையும் ஷேர் செய்து இருக்கிறார்கள். வரிசையாக நேற்று இரவு முழுக்க இந்த ஷேரிங் நடந்துள்ளது.

டிவிட் செய்தனர்

டிவிட் செய்தனர்

இந்த நிலையில் அவர்கள் ''நாங்கள் ஏர் இந்தியா கணக்கை ஹேக் செய்துவிட்டோம்'' என்று போஸ்ட் போட்டு உள்ளார்கள். ஒரு துருக்கி தீவிரவாதி அந்நாட்டு கொடியுடன் நிற்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த டிவிட்டுகள் டெலிட் செய்யப்பட்டுள்ளது.

English summary
The official Twitter handle of Air India, the national carrier has been hacked. A series of tweets had been posted, including one that claimed that all Air India flights had been cancelled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X