For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீசை எச்சரித்த அனல் பார்வை.. தாயை கட்டிப்பிடித்து கண்ணீரை துடைத்த பிரியங்கா - புகழும் நெட்டிசன்ஸ்

கண்களில் அனல் தெறிக்க லத்தியை தடுத்து நிறுத்திய பிரியங்காவையும், மகளை பறிகொடுத்து வலிகளோடும் வேதனைகளோடும் இருந்த தாயின் கண்ணீரை பரிவோடு துடைத்த பிரியங்காவின் புகைப்படத்தையும் பதிவிட்டு நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

ஹத்ராஸ்: நொய்டா சாலையில் காவலரின் லத்தியை தடுத்து நிறுத்தி பார்த்த கோபப்பார்வையில் பாட்டி இந்திரா காந்தியை முன்னிறுத்தினார் பிரியங்கா காந்தி. அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமைக்கு மகளை பறிகொடுத்து விட்டு வலிகளோடும் வேதனையோடும் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ஒரு தாயின் கண்ணீரை தனது கரங்களினால் துடைத்து விட்டு கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். இந்த இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டு சமூகவலைத்தளங்களில் இந்தியாவிற்கு தற்போது தேவை இதுபோன்ற தலைமைதான் என்று நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயலில் புல் அறுக்கச்சென்ற 19 வயதான பட்டியல் இன இளம்பெண்ணை 4 பேர் கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடூரத்தை வெளியே சொல்லக்கூடாது என்பதற்காக இளம்பெண்ணை கடுமையாக தாக்கினர். இதில் அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது.

Twitterati Praise Priyanka Gandhi After her Hathras Visit

அந்த கும்பலின் தாக்குதலில் முதுகெலும்பு முறிந்து படுகாயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண், ரத்த வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண் கடந்த 29ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை சொந்த ஊர் கொண்டு வந்த காவல்துறையினர், அந்த பெண்ணின் குடும்பத்தாரை வீட்டில் அடைத்து வைத்து விட்டு உடலை காவல்துறையினரே தகனம் செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையுடம் பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை பத்திரிக்கையாளர்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் சந்திக்க முற்பட்டனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்கவோ அல்லது அந்த கிராமத்திற்கு செல்லவோ உத்தரபிரதேச போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட ஹத்ராஸ் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் முடிவு செய்து வியாழக்கிழமை ஹாத்தரஸ் செல்ல முயன்றனர்.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை போலீசார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே தள்ளப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ராகுல், பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் பிரமுகர்களை போலீசார் கைது செய்து சில மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர். ராகுல்காந்தி கைது சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை நான் சந்திப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி டுவீட் செய்திருந்தார். சனிக்கிழமையன்று ஹாத்தரஸ் நகருக்கு ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் புறப்பட்டனர்.

ராகுல், பிரியங்கா வருகையைத் தடுக்கும் பொருட்டு டெல்லி - நொய்டா நெடுஞ்சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உத்தரபிரதேச மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் அனைவரும் நொய்டா நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனர். எல்லைகள் சீல் வைக்கப்படவில்லை என்றாலும் வாகனங்கள் கடுமையான ஆய்வுக்குப் பின்பே அனுப்பப்பட்டன.

டெல்லி-நொய்டா நெடுஞ்சாலை மேம்பாலத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் கார், காங்கிரஸ் எம்.பி.க்களின் சிறிய பேருந்து வந்ததும் அதை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ், தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதைப்பார்த்த பிரியங்கா காந்தி, உடனடியாக அங்கிருந்த தடுப்பு சுவரை தாண்டி குதித்து தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என காவல்துறையினரின் லத்தியை கையால் தடுத்து எச்சரித்தார். அப்போது அவரது பார்வையில் அனல் தெரித்தது. சில நிமிடங்கள் கழித்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க போலீசார் அனுமதியளித்தனர். நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ராகுல்காந்தியும், பிரியங்காவும் ஆறுதல் கூறினர்.

ராகுல்காந்தி, பிரியங்காவின் போராட்ட வீடியோவும் ஆறுதல் கூறிய போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திரா காந்தியுடன் பிரியங்காவை ஒப்பிட்டு போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

English summary
The video of Rahul Gandhi and Priyanka's protest and the consolation photos have gone viral on social media. They have been posting photos comparing Priyanka with Indira Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X