For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வணிகமயமாகும் ஊடகங்கள்- ஆச்சார்யா கல்வி நிலையத்தில் 2 நாள் தேசிய கருத்தரங்கம்

Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆச்சார்யா பட்டயக்கல்வி நிலையத்தின் தகவல் தொடர்பு துறை சார்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

ஆச்சார்யா பட்டயக்கல்வி நிலையத்தின் தகவல் தொடர்புத் துறை "வணிகமயமாகும் ஊடகங்கள் மற்றும் பொதுசேவைத்தொடர்புகள்" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கை ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதி அன்று நடத்தியது.

இந்நிகழ்ச்சியினை மூத்த பேராசிரியர் ஈஸ்வரராவ் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தூர்தர்ஷனின் முன்னாள் கூடுதல் பொது இயக்குனரான என்.ஜி.ஸ்ரீனிவாசா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஜெ.எம்.ஜெ கல்வி நிறுவனங்களின் தலைவர் .பி.எம்.ரெட்டி முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கின் முதல்நாள், வானொலி என்ற தலைப்பில் ஆல் இண்டியா ரேடியோவின் முன்னாள் கூடுதல் பொது இயக்குனர் டாக்டர் ஹெச்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையுரை ஆற்றினார்.ஐந்து சிறப்பு ஒளிப்பதிவாளர்கள் மற்றும் சிறந்த கல்வியாளர்கள் மூலம் சிறப்புரை வழங்கப்பட்டது.

இரண்டாவதாக தொலைக்காட்சி என்ற தலைப்பில் என்.ஜி.ஸ்ரீனிவாசா தலைமையுரை ஆற்றினார்.இதில் நான்கு சிறந்த ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினர்.

கருத்தரங்கின் இரண்டாம் நாள் முறையே அச்சு ஊடகம் மற்றும் திரைப்படத்துறை சார்பாக ஹெச்.எஸ்,ஈஸ்வரராவ் மற்றும் பி.கே ரவி ,தகவல் தொடர்புத்துறை, பெங்களூரு பல்கலைக்கழகம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். மேலும் இக்கருத்தரங்கில் தகவல் தொடர்பு சம்பந்தமான அனைத்து துறைகளைப்பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டது.

இறுதியாக கர்நாடகா ஜன பட நிறுவனத்தின் தலைவரும்,நாட்டுப்புறவியல் நிபுணருமான முனைவர் பனந்தூர் கெம்பையா நன்றியுரை ஆற்றினார்.

English summary
The Two day National Seminar was organized by the Department of Mass Communication on ‘Commercialization of Media and Public Service Communication' On 30 and 31st Jan in acharya institute of graduate studies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X