For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திர தேர்தலில் வன்முறை.. இருவர் பலி.. ஸ்டாலின் சட்டை போல் சபாநாயகரின் சட்டை கிழிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections: ஆந்திராவில் பல பூத்களில் வேலை செய்யாத வாக்குபதிவு எந்திரம் | எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்-வீடியோ

    அமராவதி: ஆந்திர மாநிலம் ராஜபாளையம் அருகே உள்ள வாக்குச் சாவடியில் தெலுங்கு தேசம் கட்சியும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் மோதலில் ஈடுபட்டதால் இருவர் பலியாகிவிட்டனர்.

    ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டசபை தொகுதிகள் மற்றும் 25 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக நடந்த வாக்குப் பதிவு பல்வேறு இடங்களில் வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு ஆனதால்

    தொய்வு ஏற்பட்டது.

    எலெக்சன் கமிஷன் செஞ்சது நியாயமே இல்லை, கொதித்து எழுந்த சந்திரபாபு நாயுடு தர்ணா எலெக்சன் கமிஷன் செஞ்சது நியாயமே இல்லை, கொதித்து எழுந்த சந்திரபாபு நாயுடு தர்ணா

    வாக்களியுங்கள்

    வாக்களியுங்கள்

    இந்த நிலையில் அனந்தபூர் மாவட்டம், தாடிபத்திரி தொகுதிக்குட்பட்ட வீராப்புரத்தில் வாக்குச் சாவடி மையத்தில் மக்கள் வாக்களித்து வந்தனர். அப்போது அங்கிருந்த தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என வாக்காளர்களிடம் கேட்டனர்.

    இருவர் பலி

    இருவர் பலி

    அப்போது இரு கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர் சித்தா பாஸ்கர ரெட்டியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர் புல்லா ரெட்டியும் படுகாயமடைந்தனர். இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    சட்டை கிழிப்பு

    சட்டை கிழிப்பு

    மேலும் இந்த மோதலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதால் சபாநாயகர் சிவபிரசாத்தின் சட்டை கிழிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    உடைப்பு

    அனந்தப்பூர் தொகுதியில் வாக்களிக்கும் போது வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது பெயர் சரியாக இல்லை என்று கூறி ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் வாக்குபதிவு எந்திரத்தை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Two died in a clash between Telugu Desam party and YSR Congress party in a polling station near Anadhapur District.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X