For Daily Alerts
ஆந்திர போலீஸ் வெறியாட்டத்தில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்களாம்!
சித்தூர்: ஆந்திர மாநிலப் போலீஸார் இன்று சித்தூர் மாவட்டத்தில் நடந்ததிய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் 2 பேர் சர்வதேச கடத்தல்காரர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தகவலை செம்மரக் கடத்தல் தடுப்புப் போலீஸ் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மொத்தம் 2 பேர் பலியாகியுள்ளனர். இதில் 11 பே்ர் ஸ்ரீனிவாச மங்காபுரத்திலும், 9 பேர் ஸ்ரீவாரி மெட்டு பகுதியிலும் கொல்லப்பட்டனர்.
சம்பவ இடத்தில் 80க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். கொல்லப்பட்ட 20 பேரில் 2 பேர் சர்வதேச கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாம்.
இருப்பினும் அவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவற்றை இதுவரை ஆந்திர போலீஸார் வெளியிடவில்லை.