இரட்டை இலையை எங்களுக்கே கொடுங்க.. சசிகலா தரப்பில் இன்று 47, 151 பிராமணப் பத்திரம் தாக்கல்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று சசிகலா தரப்பில் 47, 151 பிராமணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையகத்தில் சசிகலா அணி சார்பில் 47,151 பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணியாகப் பிரிந்தது. இரு அணிகளும் தாங்கள் தான் உண்மையான அதிமுகவினர் என்று கூறி இரட்டை இலை சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு கோரிக்கை வைத்தபோது, தேர்தல் ஆணையம் அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கி வைத்தது. மேலும், இரு அணிகளையும் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

கடைசி நாள்
இரட்டை சிலை சின்னத்தை முடக்கிய தலைமை தேர்தல் ஆணையம் ஜூன் 16-ம் தேதிக்குள் பிராமண பத்திரங்களை தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் உத்தரவிட்டது.

களத்தில் குதித்த ஓபிஎஸ் டீம்
இதனையடுத்து, ஓ.பி.எஸ் அணி சார்பாக கடந்த மார்ச் 20ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம், அதிமுக நிர்வாகிகள் 6000 பேர், பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர். அதன் பின்னர், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, ஓ.பி.எஸ் அணி சார்பாக மீண்டும் 6500 பேர், பிராமண பத்திரம் தாக்கல் செய்தனர்.

கட்டுக்கட்டாக ஆவணம்
அதைத்தொடர்ந்து கடந்த மே 12ஆம் தேதி ஓ.பி.எஸ் அணி தரப்பில் மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக மீண்டும் 12,600 பக்கங்கள் கொண்ட பிராமண பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தனர். இதையடுத்து ஓ.பி.எஸ். அணி சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த பட்டியலின் எண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்தது. மேலும், ஓ.பி.எஸ். அணி தரப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிராமண பத்திரங்களை மனோஜ் பாண்டியன், பாபு முருகவேல் ஆகியோர் மே 29ஆம் தேதி தாக்கல் செய்தனர்.

அதிமுக அம்மா அணி
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அம்மா அணியினரும், கடந்த மே 30ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் 75,000 பிராமண பத்திரங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.

லாரி லாரியாக ஆவணம்
சசிகலா அணி சார்பில் 3 லட்சத்து 10 ஆயிரம் பிராமண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 12ம் தேதி 4வது முறையாக சசிகலா அணி சார்பில் அமைச்சர் சி.வி. சண்முகம் 1 லட்சத்து 52 ஆயிரம் பிராமண பத்திரங்களை 4 லாரிகளில் டெல்லிக்குக் கொண்டு செல்லப்பட்டு தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

5வது முறையாக பிராமணப் பத்திரம்
இந்நிலையில், 5வது முறையாக இன்று 47,151 பிராமண பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தில் சசிகலா அணி தாக்கல் செய்துள்ளது. சசிகலா அணி இதுவரை மொத்தம் 3,98,632 பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங்












Click it and Unblock the Notifications