For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமர்நாத்தில் மேகம் வெடித்து கொட்டியது கனமழை- பனிலிங்கம் தரிசிக்க சென்ற 2 சிறுவர்கள் பலி!

Google Oneindia Tamil News

ஜம்மு: அமர்நாத்தில் மேகம் வெடித்து பெருமழை பெய்த சம்பவத்தில் பனிலிங்கத்தை தரிசிக்க சென்ற யாத்ரீகர்களின் 12 மற்றும் 13 வயதான இரண்டு குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வானத்தில் திரளும் கருமேக கூட்டங்கள் ஒன்றோடொன்று வேகமாக மோதும் வேளைகளில் மேகங்களில் உள்ள வேதிப் பொருட்கள் ஒரே நேரத்தில் வெடித்து, இடி, மின்னலுடன் பெருமழையாக பெய்வதுண்டு. சில வேளைகளில் ஆலங்கட்டி மழையாகவும் இது மாறுவதுண்டு. மிகச் சில நிமிடங்களில் அதிக அளவிலான மழை பொழிவதால், இவ்வகை மழையால் பெரும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு இயற்கை பேரிடருக்கு வழிவகுக்கும்.

Two miners killed, 11 missing as cloudbursts hit Amarnath

நிலத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் உயரத்திற்கு மேலிருக்கும் மேகங்களில் இருந்தே முகிற்பேழ் மழை உருவெடுப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இம்மழை பொழிவானது மணிக்கு சுமார் 100 மில்லி மீட்டர் அளவிலான நீரை நிலத்தில் பொழியும்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது.

59வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இந்த யாத்திரையில் மலைப்பாதை வழியாக நடந்து செல்ல 2 லட்சத்து 4 ஆயிரத்து 508 பேரும், ஹெலிகாப்டர் மூலம் பல்டாக் மற்றும் பாஹல்காம் பகுதியில் இருந்து பஞ்தர்னியை சென்றடைய 22 ஆயிரத்து 104 பேரும் முன்பதிவு செய்திருந்தனர்.

கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணித்து, 3,888 மீட்டர் உயரமுள்ள குகைக்கோயிலை தரிசிப்பதற்காக பல்டல் மலையடிவார முகாமில் இருந்து நேற்றைய குழு புறப்பட்டுச் சென்றது. காஷ்மீரின் கன்டேர்பால் மாவட்டம் வழியாக யாத்ரீகர்கள் குழு சென்று கொண்டிருந்தபோது, பின்னிரவு நேரத்தில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டது.

சில நிமிடங்களில் பயங்கர இடி, மின்னலுடன் முகிற்பேழ் மழை கொட்டத் தொடங்கியது. அசுர வேகத்தில் பெய்த பெருமழையில் இருந்து தப்பிக்க வழியில்லாத யாத்ரீகர்கள் நடுவழியில் திண்டாடிப்போய் நின்றனர். இந்த மழைக்கு 12 வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமி பலியாகியுள்ளனர். மேலும், 11 பேர் மழையால் வழிமாறிப் போய்விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்டால் மலையடிவார முகாம்களில் சிலவற்றில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதாகவும், மழை சார்ந்த விபத்துகளில் பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

English summary
Two children have been killed and 11 people are missing in the cloudbursts that hit the Baltal area, which houses a base camp for the annual Amarnath pilgrimage in Jammu and Kashmir, police said on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X