For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு? செல்லமேஸ்வருடன் 2 நீதிபதிகள் சந்திப்பு!

தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளை மற்ற நீதிபதிகள் சந்தித்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளை மற்ற நீதிபதிகள் சந்தித்து வருகின்றனர்.

உச்சதிமன்ற தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் 4 பேர் சரமாரி குற்றச்சாட்டுகளை கூறினர். இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக கூறப்பட்ட குற்றச்சாட்டால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.

Two more judges of Supreme court has met with Judge Chelameswar

தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தலைமை நீதிபதி குறித்து புகார் கூறிய நீதிபதி செல்லமேஸ்வரை மேலும் 2 நீதிபதிகள் சந்தித்திருப்பது பரபரப்பை கூட்டியுள்ளது. நீதிபதிகள் எஸ்ஏ பாப்டே, நாகேஷ்வர ராவ் ஆகியோர் நீதிபதி செல்லமேஸ்வரை சந்தித்துள்ளனர்.

சக நீதிபதிகளின் சந்திப்பால், தலைமை நீதிபதி மீது புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு பெருகி வருவதாக கருதப்படுகிறது. புகார் கூறிய நீதிபதிகளுக்கு ஆதரவு அதிகரிப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Two more judges of Supreme court has met with Judge Chelameswar who alleged Chief justice of India. It is believed that support is increasing for judges who complained to the Chief Justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X