For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூக்குமுட்ட குடித்துவிட்டு பிக்அப் செய்ய வந்த உபர் டிரைவர்.. தானே காரை ஓட்டி சென்ற பயணி

Google Oneindia Tamil News

Recommended Video

    உபர் கால் டாக்ஸி டிரைவர் போதையில் இருந்ததால் கரை தானே ஓட்டிய பயணி-வீடியோ

    பெங்களூர்: உபர் கால் டாக்ஸி டிரைவர் மது குடித்து விட்டு வந்ததால் பயணியே காரை ஓட்டிச் சென்ற சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சூர்யா ஒருகாந்தி என்ற பயணி இதுதொடர்பான தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தான் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக உபர் கால் டாக்ஸி புக் செய்த போது தனது செல்போனில் வந்த டிரைவர் பெயருக்கும் நேரில் வந்த நபர் பெயருக்கும் வித்தியாசம் இருந்ததை கவனித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    Uber cab driver drunk, passenger drives car in Bengaluru

    மேலும், தன்னை பிக் அப் செய்ய வந்த டிரைவர் மது குடித்திருந்தது, மயக்கமுறும் நிலையில் இருந்ததால், தானே காரை இயக்கியதாகவும், அப்போது டிரைவரின் நிலைமையை செல்போனில் வீடியோ எடுத்து கொண்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்

    அந்த வீடியோவில், தான் செல்போனில் வீடியோ எடுப்பது அந்த டிரைவருக்கு தெரியாத நிலையில் இருந்ததாகவும், ஆப்பில் குறிப்பிட்ட பெயருள்ள டிரைவர் இவர் இல்லை என்றும் புகார் கூறியுள்ளார். இதற்கு உபர் நிறுவனம் அளித்துள்ள ரிப்ளேயில், எங்களது பாதுகாப்பு டீம், இந்த விவகாரத்தை கையாளும் என தெரிவித்துள்ளது.

    இதனிடையே இன்று காலை சூர்யா வெளியிட்ட ட்வீட்டில், புகார் கொடுத்து 20 மணி நேரம் கழித்து, உபர் பாதுகாப்பு டீம் எனக்கு கால் செய்திருந்தனர். பாதுகாப்பு இல்லை என்பதால், நான் காரை இயக்கியிருக்க கூடாது என அவர்கள் அட்வைஸ் செய்தனர். டிரைவருக்கு கற்பிப்பதாகவும், தேவைப்பட்டால் டிரைவரை பணி நீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

    English summary
    An Uber cab passenger has claimed his driver, who was a different person from the one whose name appeared on the app was in an inebriated condition, forcing him to take the wheel to reach his residence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X