For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிகாரர்களை கண்டுபிடிக்கும் உபர் டாக்சி.. சிறப்பு சர்விஸ் வழங்க ரோபோ அறிமுகம்!

பிரபல டாக்சி நிறுவனமான உபர், காரில் யாராவது குடித்துவிட்டு ஏறினால் அதை கண்டுபிடிப்பதற்காக ''ஏஐ'' ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    சிக்கிம் விளம்பரத் தூதுவராக ஏ.ஆர்.ரஹ்மான் | குடிகாரர்களை கண்டுபிடிக்கும் உபர் டாக்சி- வீடியோ

    நியூயார்க்: பிரபல டாக்சி நிறுவனமான உபர், காரில் யாராவது குடித்துவிட்டு ஏறினால் அதை கண்டுபிடிப்பதற்காக ''ஏஐ'' ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த வசதி செய்யப்பட உள்ளது.

    இதை பெறுவதற்காக, உபர் நிறுவனம் காப்புரிமை கோரியுள்ளது. இன்னும் 6 மாதத்திற்குள் இந்த வசதி உபர் கார்களில் ஏற்படுத்தப்பட உள்ளது.

    தற்போது கால் டாக்சிகளில் வித்தியாசமான வசதிகள் உருவாக்கப்பட உள்ளது. அதில் ஒரு வகையாக குடித்துவிட்டு வரும் பயனாளிகளை கண்டுபிடிக்க ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் பயன்படுத்தப்பட உள்ளது.

    எப்படி செய்யும்

    எப்படி செய்யும்

    இந்த ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் வித்தியாசமான முறையில் செயல்பட உள்ளது. அதன்படி காரில் இருக்கும் கேமராக்கள் நாம் நடக்கும் வேகம், நாம் தள்ளாடுகிறோமா, கைகளை எப்படி ஆட்டுகிறோம், எப்படி பேசுகிறோம் என்பதை எல்லாம் வைத்து நாம் குடித்து இருக்கிறோமோ இல்லையா என்பதை கண்டுபிடித்து சொல்லும்.

    என்ன செய்ய போகும்

    என்ன செய்ய போகும்

    நாம் குடித்து இருப்பது தெரிந்தால், காரைவிட்டு நம்மை இறக்கமாட்டார்கள். மாறாக அதற்கு ஏற்றபடி கார் ஓட்டுனர்களை ஓட்ட சொல்லி, அதற்கு ஏற்றபடி கார் ஓட்டுனர்களை நம்மிடம் நடந்து கொள்ள வைப்பார்கள். மேலும் நாம் இறங்கும் இடத்தில் சரியாக இறக்கவும், அதற்கு தகுந்த ஓட்டுனர்களை அனுப்பவும் உபர் இதன் மூலம் உதவும்.

    ஒரு ரகசியம்

    ஒரு ரகசியம்

    இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. நாம் கார் புக் செய்யும் போதே, அந்த ஆப் மூலமே நம்மை உபர் கண்டுபிடித்துவிடும். நாம் டைப் செய்யும் வேகம், தவறாக டைப் செய்வது, கீ போர்டில் இருக்கும் ஆட்டோ கரெக்ட் ஆப்ஷனை தேர்வு செய்வது எல்லாவற்றையும் வைத்து நாம் குடித்து இருக்கிறோம் என்று கண்டுபிடித்துவிடும்.

    இன்னொரு பிரச்சனை

    இன்னொரு பிரச்சனை

    இது மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கும் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதன் மூலம் பர்சனல் என்ற விஷயம் ஒன்றே இருக்காது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னும் இதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Uber to find drunk passenger using AI technology, applies for copyright.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X