India
 • search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உதய்பூர் கொடூரம்! கைதானவர் பாஜக? பகீர் கிளப்பிய காங்.. ‘விடுதலைப் புலிகள்’ குறுக்கே வந்த மால்வியா!

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட தையல் கடைக்காரர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என காங்கிரஸ் பரபரப்பு புகார் கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் இதனை பாஜக மறுத்துள்ளது.

  Nupur Sharma, Delhi Police-ஐ விளாசும் Supreme Court | Udaipur Tailor *India

  ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரர் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் வீடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

   இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்..அதன் பின் அவர்கள் செய்த காரியம் கொடூரத்தின் உச்சம் இளம் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்..அதன் பின் அவர்கள் செய்த காரியம் கொடூரத்தின் உச்சம்

  உதய்பூர் தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருப்பவர் கன்னையா லால். இவர் அண்மையில் இஸ்லாம் குறித்து சமூக வலைதளத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் அவரை உள்ளூர் போலீஸார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

  உதய்பூர் கொடூரம்

  உதய்பூர் கொடூரம்

  இந்த நிலையில், கன்னையா லாலின் கடைக்கு செவ்வாய்க்கிழமை 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் கன்னையா லாலின் கழுத்தை கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தார். அவர் கொலை செய்யப்பட்டதை மற்றொருவர் கைப்பேசியில் படம் பிடித்து அந்த வீடியோவை உடனடியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில், இஸ்லாத்தை அவமதித்த காரணத்தால் கன்னையா லாலை பழிதீர்த்தாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்தியா முழுவதும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக மத்திய அரசு வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

  பாஜக தொடர்பு

  பாஜக தொடர்பு

  கொலையானவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில், தற்போது இந்த கொலை தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அதில் கொலையாளிகள் என கைது செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவரான ரியாஸ் அத்தாரி, பாஜகவின் பாஜக சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர் என பகீர் புகாரை எழுப்பி உள்ளது.

  காங்கிரஸ் புகார்

  காங்கிரஸ் புகார்

  இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மீடியா செல் தலைவர் பவன் கேரா, ரியாஸ் அத்தாரி பாஜகவை சேர்ந்தவர் என்பதால்தான் இந்த வழக்கை மத்திய அரசு அவசர அவசரமாக என்னையே விசாரணைக்கு மாற்றி உள்ளது அவர் பாஜகவை சேர்ந்தவர் தான் என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவுகள் தன்னிடம் உள்ளது மேலும் இவர் பல்வேறு பாஜக நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொண்டுள்ளார். இது விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தேவையற்ற மௌனம் காத்து வருகின்றனர்..

  பாஜக மறுப்பு

  பாஜக மறுப்பு

  இவர்களின் மௌனத்தால் நாட்டில் மேலும் ஒரு மத மோதல் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதனை பாஜகவே ஆதரிப்பதோ என்ற எண்ணமும் இருக்கிறது." என கூறியிருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டினை பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா மறுத்துள்ளார். இது போன்ற போலி செய்திகளை பரப்புவது காங்கிரசுக்கு வழக்கம் என்றும் இது தொடர்பாக தனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் "ரியாஸ் அத்தாரி போன்றோரின் ஊடுருவல் காங்கிரஸில் விடுதலைப் புலிகள் ஊடுருவ முயற்சி செய்து ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு சமமானது. பயங்கரவாதம் தேச பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களை காங்கிரஸ் இது போன்ற முட்டாள்தனங்கள் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  English summary
  The Congress has raised a sensational complaint that one of the people arrested after the murder of a tailor shopkeeper who posted comments in support of Nubur Sharma in Udaipur, Rajasthan, belongs to the BJP. At the same time BJP has denied this.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X