For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனாரஸ், அலிகார் பல்கலைக்கழக பெயர்களில் மதச்சாயம் வேண்டாம் நீக்குங்க- யுஜிசி குழு குட்டு!

மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களின் பெயர்களில் இந்து, முஸ்லீம் என்று இடம்பெற்றிருப்பது தேவையற்றது என்று பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : பனாரஸ் மற்றும் அலிகார் பல்கலைக்கழகங்களின் குறிப்பிடப்பட்டுள்ள இந்து, முஸ்லீம் என்ற வார்த்தைகளை நீக்குமாறு பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்துள்ளது.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் 10 பல்கலைக்கழகங்களில் மாணவர்களிடையே மத வேறுபாடுகள் இருக்கின்றனவா என்று மத்திய பல்கலைக்கழக மானியக் குழு விசாரணை நடத்தியது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் மதப் பெயர்களால் வேறுபாடு நிலவுகிறது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து இந்த விசாரணை நடைபெற்றது.

UGC advises centre to drop the names of Hindu, Muslim in the university names

விசாரணையின் முடிவில் மத்திய அரசின் நிதியின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மதங்களைப் பிரதிபலிக்கக் கூடாது. எனவே பல்கலைக்கழகங்களில் உள்ள மத பெயர்களை நீக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மானிய குழுவான யூ.ஜி.சி பரிந்துரை செய்துள்ளது.

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை , அலிகார் பல்கலைக்கழகம் என்றும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை பனாரஸ் பல்கலைக்கழகம் என்றோ அல்லது அந்த பல்கலைக்கழகங்களை நிறுவியவர்களின் பெயர்களிலோ மாற்றி அமைக்கலாம் என்றும் யூ.ஜி.சி பரிந்துரை செய்துள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தவிர இதர பல்கலைக்கழகங்களான பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், உத்ராகாண்டில் உள்ள அலஹாபாத் பல்கலைக்கழகம், ஹேம்வதி நந்தன் பகுகுனா கர்வால் பல்கலைக்கழகம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ஜம்மு மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றிலும் யுஜிசி குழு ஆய்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
University grants comission advised Human resources department to drop the religion names of Hindu, Muslim from Banara hindu university and Aligarh Muslim University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X