For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க வீட்டில் நீங்க ஒரே பெண் குழந்தையா? – அப்டீன்னா உங்களுக்கு கல்வி உதவித்தொகை நிச்சயம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சுவாமி விவேகானந்தா ஒற்றைப் பெண் குழந்தைக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு இந்த உதவித்தொகை அறிவித்துள்ளது.

UGC announces University Scholarships for single girl child

கல்வி கொள்கையின் முக்கிய குறிக்கோளாக பெண்கள் கல்வி மேம்பாடு விளங்குகிறது. சமூகத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டியது அவசியமாகும். அந்தவகையில் குடும்பத்தில் ஒற்றைப் பெண் குழந்தைக்கான சிறப்பு சலுகையை இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அங்கீகாரம் பெற்ற பல்கலை, கல்லூரி, கல்வி நிறுவனங்களில் சமூக அறிவியல் மற்றும் அறிவியலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 8 ஆயிரமும், மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகளில் ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படும். சூழ்நிலை அடிப்படையில் ஐந்தாம் ஆண்டும் உதவித்தொகை நீட்டிக்கப்படும்.

இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பவர் குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையாக இருக்க வேண்டும். முழுநேர படிப்பை மேற்கொள்பவராக இருக்க வேண்டும். நவம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். கூடுதல் தகவல்களுக்கு யுஜிசி இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The University Grants Commission (UGC), New Delhi has announced Swami Vivekananda Scholarship 2014-15 for the girls who are single girl child to their parents and are pursuing regular full-time Doctor of Philosophy (Ph.D) programme in Social Sciences in any recognised university/institute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X