For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாகூப் குறித்த சல்மானின் டிவிட் தவறு, நீக்க வேண்டும்- அரசு வக்கீல் உஜ்வால் நிகாம்

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: யாகூப் மேமன் பற்றி தான் போட்ட ட்வீட்டுகளை நடிகர் சல்மான் கான் வாபஸ் பெற வேண்டும் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகம் தெரிவித்துள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேனுக்கு வரும் 30ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில் யாகூப் மேமன் அப்பாவி என்றும், அவரது சகோதரர் டைகரை பிடித்து தூக்கிலிடுங்கள் என்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Ujjwal Nikam says Salman Khan's tweets are objectionable, must be withdrawn

இந்நிலையில் இது குறித்து யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதாடி தண்டனை பெற்றுக் கொடுத்த சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்வால் நிகம் கூறுகையில்,

சல்மான் கான் யாகூப் மேமன் பற்றி வெளியிட்டுள்ள ட்வீட்டுகள் ஆட்சேபணைக்குரியன. அதனால் அவர் தனது ட்வீட்டுகளை வாபஸ் பெற வேண்டும். சல்மான் நீதித் துறையின் இமேஜை குறைக்கப் பார்க்கிறார். இது கண்டனத்திற்குரியது என்றார்.

ஒரு அப்பாவியை கொலை செய்வது மனித நேயத்தை கொல்வது போன்றாகும் என்று சல்மான் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

English summary
Special public prosecutor Ujjwal Nikam said that actor Salman Khan should withdraw his tweets on Yakub Memon as they are objectionable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X