For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    நிர்மலா சீதாராமனை புறக்கணித்தாரா பிரிட்டன் அமைச்சர்?- வீடியோ

    டெல்லி: பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவின் வில்லியம்சன் தன்னை சந்திக்க மறுத்ததாக வெளியான தகவல்களை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.

    பிரிட்டனை சேர்ந்த சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில், நிர்மலா சீதாராமனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வில்லியம்சன் மறுத்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது.

    இந்த செய்தி இந்தியாவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால், இச் செய்தியை நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார்.

    அதிருப்தி

    நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ட்வீட்டில், "சண்டே டைம்ஸ் செய்தி அதிருப்தியளிக்கிறது. அடிப்படை இல்லாத செய்தி அது. இந்தியா-பிரிட்டன் நடுவே நல்ல உறவு உள்ளது. இரு தரப்புக்கும் வசதியான தேதியை முடிவு செய்யதான் தாமதமாகி வருகிறது. ஆலோசனை கூட்டம் நடைபெறுவதை எதிர்நோக்கியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

    பிரிட்டன் அமைச்சர் ஆமோதிப்பு

    இந்த ட்வீட்டிற்கு வில்லியம்சனும் பதிலளித்துள்ளார். நானும் இக்கூட்டத்தை மிகுந்த எதிர்பார்ப்போடு நோக்கியுள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம், இரு அமைச்சர்கள் நடுவேயான சந்திப்பு குறித்த யூகங்கள் முடிவுக்கு வந்துள்ளன.

    இந்தியாவின் மதிப்பு

    இந்தியாவின் மதிப்பு

    முன்னதாக சண்டே டைம்ஸ் வெளியிட்டிருந்த செய்தியில், பாதுகாப்பு துறை பட்ஜெட்டில் அதிக வளர்ச்சி காட்டும் நாடுகளில் ஒன்று இந்தியா. வருடத்திற்கு 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பணத்தை செலவிடுகிறது. எனவே, வில்லியம்சனின் இந்த நடவடிக்கை, அவரின், மற்றொரு மோசமான செயல்பாடு என்றே தெரிகிறது. இவ்வாறு அந்த பத்திரிகை செய்தி கூறியிருந்தது.

    நடந்தால் நல்லது

    நடந்தால் நல்லது

    'பிரிட்டன்-இந்தியா வாரம்' நிகழ்ச்சியின் நிறுவனர் மனோஜ் லட்வா இதுபற்றி கூறுகையில், வில்லியம்சன் இரு நாட்டு அமைச்சர் மட்டத்திலான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கினால் அது சிறப்பானதாக இருக்கும். அதேநேரம், அவ்வாறு சந்திப்பு நடக்காவிட்டாலும், இந்தியர்கள் ஒன்றும் தூக்கத்தை தொலைத்துவிட மாட்டார்கள். அவ்வாறு நம்மை நாம் கேலி செய்ய தேவையில்லை" என்றார்.

    English summary
    Defence Minister Nirmala Sitharaman has expressed disappointment over a "baseless" media report in the UK that alleged her British counterpart Gavin Williamson turned down a request for a bilateral meeting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X