For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திடீரென மனசை மாற்றிய உமா பாரதி.. ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பு

Google Oneindia Tamil News

அயோத்தி: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என கூறிய பாஜக மூத்த தலைவர் உமா பாரதி பிறகு தனது முடிவை மாற்றிக்கொண்டு விழாவில் பங்கேற்றார்.

Recommended Video

    29 ஆண்டுகளுக்கு பிறகு Ayodhyaக்கு வந்த மோடி

    அயோத்தி செல்வதற்கு சற்று முன்பு இன்று காலை வெளியிட்ட ட்வீட்டில், "நான் மரியாதா புருஷோத்தமன் ராமரால் ஈர்க்கப்பட்டு அயோத்திக்கு அழைக்கப்படுகிறேன். ஒரு மூத்த ராம ஜென்மபூமி அறக்கட்டளை அதிகாரி, பூமி பூஜையில் நானும் பங்கேற்க அழைக்கிறார். எனவே நான் இந்த நிகழ்வில் பங்கேற்பேன்" என்று தெரிவித்திருந்தார்.

    அவர் கூறியபடியே, அயோத்திக்கும் உமா பாரதி சென்றிருந்தார். யோகி ஆதித்யநாத் அவரை வரவேற்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. தலைவர்கள் இருவரும் முகக் கவசம் அணிந்து காணப்பட்டனர்.

    கொரோனா தடுப்பு மருந்து...முந்திக் கொண்டதா ரஷ்யா... இந்தியா பேச்சுவார்த்தை!! கொரோனா தடுப்பு மருந்து...முந்திக் கொண்டதா ரஷ்யா... இந்தியா பேச்சுவார்த்தை!!

    பாகுபாடு இல்லை

    பாகுபாடு இல்லை

    அயோத்தி அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. இப்போது இந்த நாடு, இங்கு எந்தவிதமான பாகுபாடும் இல்லை என்று பெருமையுடன் உலகத்துடன் சொல்ல முடியும், என்று உமா பாரதி செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    பங்கேற்கவில்லை என்றார்

    பங்கேற்கவில்லை என்றார்

    கடந்த 3ம் தேதி உமா பாரதி வெளியிட்ட ட்விட்டில், நான் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ரயில் மூலமாக பயணிக்க உள்ளேன். பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்கும் பூமி பூஜை விழாவில், நான், பங்கேற்க போவதில்லை. அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகு அந்த இடத்துக்கு சென்று வழிபாடு செய்வேன். அதுவரை சரயு நதிக்கரையில் நான் இருப்பேன். இவ்வாறு உமா பாரதி ட்வீட்டுகளை வெளியிட்டிருந்தார்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்களில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய தலைவர்களும் உண்டு. கடந்த வாரம் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் அவர்கள் தங்கள் வாக்குமூலத்தை அளித்தனர்.

    பாபர் மசூதி

    பாபர் மசூதி

    1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி, கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இதற்கான தூண்டுதலை இந்த தலைவர்கள் முன்னெடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய தலைவர்கள், தங்கள் வீடுகளில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்ச்சிகளை பார்த்தனர்.

    English summary
    BJP senior leader Uma Bharti later changed her mind and attended the groundbreaking ceremony in Ayodhya, after she said she would not attend the groundbreaking ceremony of the Ram Temple in Ayodhya as a precaution against the corona virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X