For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலில் போட்டியில்லை.. எம்.பி உமா பாரதி திடீர் முடிவு.. பாஜகவின் துணைத் தலைவராகிறார்!

பாஜக கட்சியின் துணை தலைவராக எம்.பி உமா பாரதி தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

Google Oneindia Tamil News

போபால்: பாஜக கட்சியின் துணை தலைவராக எம்.பி உமா பாரதி தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்தவர் பாஜகவை சேர்ந்த உமா பாரதி. இவர் வரிசையாக பல்வேறு லோக்சபா தேர்தல்களில் பாஜக சார்பாக போட்டியிட்டு உள்ளார். இவர் பாஜகவில் அறியப்படும் மிக முக்கியமான பெண் அரசியல்வாதிகளில் ஒருவர்.

Uma Bharti decides not to contest in election: BJP Appoints her as Partys Vice-president

இவர் அரசியலில் 35 வருடங்களாக அனுபவம் கொண்டவர். 1984ல் இவர் முதல்முறை லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். இந்த நிலையில் இந்தமுறை லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இவர் அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது! இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது!

தனிப்பட்ட காரணங்களால் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று இவர் கூறி இருக்கிறார். கடந்த 2014 லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் உமா பாரதி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து இவருக்கு குடிநீர் மற்றும் சுகாதார துறை வழங்கப்பட்டது.

இவர் பெண் வேட்பாளர் என்பதால் பாஜக இவரை மீண்டும் உத்தர பிரதேசத்தில் நிற்க வைக்கும் எண்ணத்தில் இருந்தது. ஆனால் இவர் மீண்டும் தேர்தலில் நிற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதையடுத்து உமா பாரதிக்கு பாஜக கட்சியில் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பாஜக கட்சியின் துணை தலைவராக எம்.பி உமா பாரதி தற்போது நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்றுதான் வெளியானது. பாஜகவில் ஒரு நபருக்கு ஒரு பொறுப்பு, பதவி மட்டுமே அளிக்கப்படும் என்பதால் தற்போது இவருக்கு துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Uma Bharti decides not to contest in the election: BJP Appoints her as Party's Vice-president for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X